Onetamil News Logo

தூத்துக்குடியில் போட்டி போட்டு வந்த தனியார் பேருந்துகள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து ;100க்கும் மேற்பட்ட பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

Onetamil News
 

தூத்துக்குடியில் போட்டி போட்டு வந்த தனியார் பேருந்துகள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து ;100க்கும் மேற்பட்ட பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்


தூத்துக்குடி  2019 ஜூலை 8 ;தூத்துக்குடியில் போட்டி போட்டு வந்த தனியார் பேருந்துகள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து ;100க்கும் மேற்பட்ட பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள். 
இன்று ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து வரும் ஒரு தனியார் பேருந்தும் புதுக்கோட்டையில் இருந்து வரும் ஒரு தனியார் பேருந்தும் ஒன்றுடன் ஒன்று போட்டி போட்டு கொண்டு வரும் பொழுது தூத்துக்குடி தெற்கு காவல் நிலையம் அருகே வந்த பொழுது விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில்  இரு பேருந்தில் பயணம் செய்த நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.இந்த விபத்து அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இரு பேருந்து நடத்துனர் ஓட்டுனர் இருவரையும் பிடித்து தெற்கு காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த விபத்து பற்றி பொதுமக்கள் கூறுகையில் தனியார் பேருந்துகளின்  அதிக வேகத்தால் அவ்வப்போது விபத்துகள் நடந்து கொண்டே தான் இருக்கின்றது.இந்த விபத்தை தடுக்கும் விதமாக ஓட்டுனர் மற்றும் நடத்துனரின்ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் அப்போதுதான் இந்த விபத்துகளை தடுக்கமுடியும் போலீசார் இந்த விஷயத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo