Onetamil News Logo

போகி பண்டிகையை புகையின்றியும், காற்று மாசின்றியும், சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் கொண்டாடி மகிழ்வோம். மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி பொதுமக்களுக்கு வேண்டுகோள்

Onetamil News
 

போகி பண்டிகையை புகையின்றியும், காற்று மாசின்றியும், சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் கொண்டாடி மகிழ்வோம். மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி பொதுமக்களுக்கு வேண்டுகோள்


        

கோவில்பட்டி 2018 ஜனவரி 10 ;தூத்துக்குடி மாவட்டத்தில் போகி பண்டிகையை புகையின்றியும், காற்று மாசின்றியும், சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் கொண்டாடி மகிழ்வோம். மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நமது முன்னோர்கள் பொங்கல் திருநாளுக்கு முன்தினம் வீட்டில் உள்ள இயற்கை சார்ந்த தேவையில்லா பொருட்களை எரித்து பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் போகி பண்டிகையினை கொண்டாடி வந்துள்ளனர். 
ஆனால் தற்பொழுது போகி பண்டிகையின் போது பழைய பொருட்களான பிளாஸ்டிக், செயற்கை இழைகளால் தயாரிக்கப்பட்ட துணிகள், ரப்பர் பொருட்கள், பழைய டயர் மற்றும் டியூப், காகிதம், இரசாயனம் கலந்த பொருட்கள் மற்றும் பிற கழிவு பொருட்கள் போன்றவற்றை எரிப்பதால் காற்று மாசு ஏற்படுவதோடு இதனால் வெளிப்படும் நச்சு வாயுக்களால் மூச்சு திணறல், கண் எரிச்சல் போன்ற நோய்களால் பொது மக்களுக்கு பாதிப்பும் ஏற்படுகிறது. வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த சிரமங்கள் ஏற்படுவதோடு விபத்துகளுக்கும் காரணமாக உள்ளது. மேலும், போகி பண்டிகையின் போது பழைய பொருட்களை எரிப்பதால் உருவாகும் புகையினால் விமானங்கள் வருகை மற்றும் புறப்பாடுகளில் தாமதம் ஏற்படுகிறது. போகி பண்டிகை கொண்டாட்டங்களின் போது கழிவுகள் எரிக்கப்படாதிருப்பதை உறுதி செய்யும் பொருட்டு தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், காவல்துறை, மாநகராட்சி மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்சிப் பணிகள் துறைகளின் அலுவலர்கள் அடங்கிய குழுவானது போகிப் பண்டிகையின் போது ரோந்து பணிகள் மேற்கொண்டு, கழிவுகள் எரிக்கப்படுவதை கட்டுப்படுத்துவர். 
எனவே, தூத்துக்குடி மாவட்ட பொதுமக்கள் போகிப்பண்டிகையின் போது பழைய பொருட்களை எரிப்பதை தவிர்த்து காற்றின் தரத்தை பாதுகாத்து காற்று மாசில்லாதவாறு போகி பண்டிகையை கொண்டாடி மகிழ ஒத்துழைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டு, அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, தெரிவித்தார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo