Onetamil News Logo

சாத்தான்குளம் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் உரிய நீதி வழங்க வேண்டும். 

Onetamil News
 

சாத்தான்குளம் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் உரிய நீதி வழங்க வேண்டும். 


தூத்துக்குடி 2020 ஜூலை 16 ;சாத்தான்குளம் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் உரிய நீதி வழங்க வேண்டும்.
AIYF தூத்துக்குடி மாவட்ட குழு,மாவட்ட செயலாளர்,வழக்கறிஞர் பெ.சந்தனசேகர்.வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ;தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டத்திற்கு உட்பட்ட உடன்குடி ஒன்றியத்திற்குட்பட்ட கல்விளை கிராமத்தில் வசிப்பவர்கள் முனீஸ்வரி ,சேகர் இவர்களுக்கு 9 வயதில் ஒரு மகனும் 8 வயதில் ஒரு மகளும் இருந்தனர். சேகர் வெளியூர்களுக்கு கூலி வேலைக்கு சென்று விடுவார் அவரது மணைவி  முனீஸ்வரி மட்டுமே தினசரி கூலிவேலை செய்து இரு குழந்தைகளையும் படிக்க வைத்துக்கொண்டு வளர்த்து வந்து உள்ளார். 
முனீஸ்வரிக்கு  குடியிருக்க நல்ல வீடு கிடையாது அதில் மின்சார வசதியும் கிடையாதாம். அதனால் நான்கு கம்பியை நட்டு அதில் ஆஸ்பெட்டாஸ் சீட் போட்டு குடி இருந்து வந்துள்ளார்.
வழக்கம் போல முனீஸ்வரி குழந்தைகளை விட்டுவிட்டு காலையில் வேலைக்கு சென்றதால் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை தங்கள்  வீட்டிற்கு டி.வி பார்க்கவா வா என்று ஏமாற்றி அழைத்து சென்று இரண்டு பேர்கள்  வன்புணர்ச்சி செய்துள்ளனர் அந்த காம கொடூரத்தில் சிறுமி இறந்துவிட கொலையை மறைக்கும் நோக்கில் ஒரு பிளாஸ்டிக் ட்ரம்மில் சிறுமி உடலை தூக்கி வைத்து  யாருக்கும் தெரியாமல் மோட்டார் சைக்கிளில் தூக்கிச் சென்று அருகில் உள்ள சடையனேரி கால்வாய் அருகில் உள்ள பலம் அருகே போட்டு உள்ளனர்.  
        (1) சிறுமியை கொலை செய்த இருவர் மீதும் SC/ST சட்ட படி வழக்கு பதிவு செய்து டி.எஸ்.பி தகுதிக்கு குறையாத பெண் அதிகாரியினை  விசாரணை அதிகாரியாக நியமித்து விரைவாக குற்ற அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்!
(2)சிறுமியின்  குடும்பத்திற்க்கு  உரிய  இழப்பீடும் பாதுகாப்பும்  வழங்க வேண்டும்.!
(3)சாட்சிகள் அனைவருக்கும் பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டும் என்று வேண்டுகிறோம் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo