Onetamil News Logo

தூத்துக்குடி ஸ்டேட் பேங்க் காலணி St.தாமஸ் அப்போஸ்தல் பள்ளி மெயின் சாலையில் 1 - மணி நேரமாக  போக்குவரத்து துண்டிப்பு

Onetamil News
 

தூத்துக்குடி ஸ்டேட் பேங்க் காலணி St.தாமஸ் அப்போஸ்தல் பள்ளி மெயின் சாலையில் 1 - மணி நேரமாக  போக்குவரத்து துண்டிப்பு


தூத்துக்குடி 2019 அக்டோபர் 21 ; தூத்துக்குடி ஸ்டேட் பேங்க் காலணி   St.தாமஸ் அப்போஸ்தல் பள்ளி மெயின் சாலையில் 1 - மணி நேரமாக  போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
ஸ்டேட் பேங்க் காலனி மெயின் சாலையில் நடந்து கொண்டு இருக்கின்ற மழை நீர் வடிகால் பணியில் ஒப்பந்தகாரரின் அலட்சிய போக்கால் இந்த வழி செல்லக்கூடிய வாகனங்கள் போக்குவரத்து நெரிசலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது . காலை 9 மணி வரை இந்த சாலை அதிகமான போக்குவரத்து நெருக்கடி இருக்கும். அந்த நேரத்தில் ரோட்டை மறித்து காங்கிரீட் கலவை ஊற்ற ரோட்டை மறித்ததால்,  பள்ளி , கல்லூரி , அரசு மற்றும்  தனியார் நிறுவன பணியாளர்கள் என பலரும் செல்லக் கூடிய நேரம் என்பதால் இந்த நெருக்கடி ஏற்பட்டது.  இந்த நெருக்கடி சுமார் 1 - மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்றதால்  பொதுமக்கள் அனைவரும் கோசமிட தொடங்கினர். இந்த சூழ்நிலை காவல்துறைக்கு தெரியபடுத்திய நிலையிலும்  ஒருவர் கூட வந்து நெருக்கடியை சரி செய்ய முடியவில்லை. இதனால் பலரும் கோபத்துக்காளாகியும் , வருந்ததுக்குள்ளாக வேண்டிய நிலையும் ஏற்பட்டது.
ஏற்கனவே இந்த மைய இடம் போக்குவரத்து மிகுதியால் அடிக்கடி விபத்துக்குள்ளாகி வருவது வாடிக்கையான நிகழ்வாக நடந்துவருகிறது. இந்த கால சூழ்நிலையில் இன்று நடந்த சம்பவம் அனைவருக்கும் இடையூராக பயத்தை ஏற்படுத்தியுள்ளது
ஆகவே இனியாவது மாநகராட்சியும் , காவல்துறையும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு பொதுமக்களுக்கு தகுந்த  பாதுகாப்பை ஏற்படுத்தி தரும்படி அப்பகுதிமக்கள் தெரிவித்தனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo