Onetamil News Logo

தூத்துக்குடியில் வரும் 19 ம் தேதி ராகுல் காந்தி பிறந்த நாள் கொண்டாட்டம் ;கண் தான முகாம்; தூத்துக்குடி மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் சி.எஸ் முரளிதரன் விடுத்துள்ள அறிக்கை

Onetamil News
 

தூத்துக்குடியில் வரும் 19 ம் தேதி ராகுல் காந்தி பிறந்த நாள் கொண்டாட்டம் ;கண் தான முகாம்; தூத்துக்குடி மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் சி.எஸ் முரளிதரன் விடுத்துள்ள அறிக்கை     


   தூத்துக்குடி 2019 ஜூன் 17 ; தூத்துக்குடி மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் சி.எஸ் முரளிதரன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி அவர்களின் 49 வது பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாநகரம், தெற்கு,வடக்கு, மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் தூத்துக்குடி எட்டையாபுரம் ரோட்டில் உள்ள கலைஞர் அரங்கில் வரும் 19 ம் தேதி புதன்கிழமை அன்று காலை 10 மணிக்கு, பிறந்த நாள் கேக் வெட்டி, பின்னர் அரவிந்த் மருத்துவ மனை குழுவினர் உடன் இணைந்து கண் தான முகாம், தூத்துக்குடி அரசு மருத்துவமனை குழுவினர் உடன் இணைந்து ரத்த தான முகாம் நடைபெற உள்ளது.

இந்த நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் சி.எஸ். முரளிதரன் தலைமை வகிக்கிறார் .தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஶ்ரீராம் முன்னிலை வகிக்கிறார்.    

 சிறப்பு விருந்தினராக அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயலாளரும், தமிழக காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர் சஞ்சய் தத் , தமிழக காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் மயூராஜெயக்குமார் ,தூத்துக்குடி சட்ட மன்ற உறுப்பினரும், வடக்கு மாவட்ட தி.மு.க.பொறுப்பாளர் கீதாஜிவன் , தமிழக இளைஞர் காங்கிரஸ் கட்சியின் முதன்மை பொது செயலாளர் ஊர்வசி அமிர்தராஜ் , மாநில துணை தலைவர் சண்முகம் , முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர்கள்  டேனியல் ராஜ், சுடலையாண்டி கலந்து கொண்டு சிறப்பிற்கிறார்கள். இவ்வாறு மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் சி.எஸ். முரளிதரன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo