Onetamil News Logo

மாநில அளவிலான கூடைப்பந்தாட்ட போட்டியில் தூத்துக்குடி மாவட்ட மாணவர்கள் 2வது இடத்தை பெற்று 25 ஆண்டுகளுக்கு பிறகு தூத்துக்குடி மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர் ;தூத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் டீ .ஆர்.பாலன், ஏ.அருள் வெங்கடேஸ் ஆகியோர் பாராட்டு 

Onetamil News
 

மாநில அளவிலான கூடைப்பந்தாட்ட போட்டியில் தூத்துக்குடி மாவட்ட மாணவர்கள் 2வது இடத்தை பெற்று 25 ஆண்டுகளுக்கு பிறகு தூத்துக்குடி மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர் ;தூத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் டீ .ஆர்.பாலன், ஏ.அருள் வெங்கடேஸ் ஆகியோர் பாராட்டு 


தூத்துக்குடி 2018 அக்டோபர் 23 ; தமிழ்நாடு கூடைப்பந்தாட்ட கழகம், அரைஸ் ஸ்டீல் நிறுவனம், விருதுநகர் மாவட்ட கூடைப்பந்து கழகம், காமராஜ் இன்ஜினியரிங் கல்லுாரி, ஆர்ஜே மந்திரா ஆங்கில பள்ளி இணைந்து 13 வயதிற்கு கீழ் உள்ள மாணாக்கர்களுக்கு மாநில அளவிலான கூடைப்பந்தாட்ட போட்டிகள்  அக்டோபர் 18ம் தேதி முதல்  22ம் தேதி வரை  விருதுநகரில் நடைபெற்றது.                          
                                          
 இந்தப்  போட்டியில் 33 மாவட்டங்களை சேர்ந்த கூடைப்பந்து வீரர்கள் கலந்து கொண்டனர். போட்டியின் முதல் நாள் 19ம் தேதி காமராஜ் இன்ஜினியரிங் கல்லுாரி தலைவர் தீனதயாளன், கல்லுாரி செயலாளர் மகேஷ்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டிகளை துவக்கி வைத்தனர். அரைஸ் ஸ்டீல் நிறுவனம் நிறுவனரும்,தமிழ்நாடு கூடைப்பந்தாட்ட கழக பாெது செயலாளருமான  ஆதவ் அர்ஜூனா, விருதுநகர் மாவட்ட கூடைப்பந்து தலைவர் பாஸ்கரன், செயலாளர் சத்யம் ஆகியோர் நல் வாழ்த்துகளுடன் கூடைபந்துப் போட்டிகள்  துவங்கியது.
இறுதி போட்டியில் திருவள்ளூர் மாவட்ட அணி 46 புள்ளிகள் எடுத்து முதலாவது இடத்தையும் , தூத்துக்குடி மாவட்ட மாணவர்கள்  40 புள்ளிகள் எடுத்து இரண்டாவது இடத்தையும்  பெற்று 25 ஆண்டுகளுக்கு பிறகு தூத்துக்குடி மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர். வெற்றி பெற்ற கூடைப்பந்து அணிகளுக்கு விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சிவஞானம் பரிசுகள் மற்றும் சுழற்கோப்பைகளை வழங்கினார். 
தமிழ்நாடு கூடைபந்தாட்ட கழக தலைவர் ராஜ்சத்தியன், செயலாளர் ஆதவ்அர்ஜூனா, மூத்த துணை தலைவர் செந்தில் தியாகராஜன், பொருளாளர் ஆந்திரபதி, துணைதலைவர் செல்வகணேஷ், தூத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் டீ .ஆர்.பாலன், ஏ.அருள் வெங்கடேஸ் ஆகியோர் உடனிருந்தனர்.                              
                                          
இந்தப் போட்டிக்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு கூடைப்பந்தாட்ட கழகம், அரைஸ் ஸ்டீல் நிறுவனம், விருதுநகர் மாவட்ட கூடைப்பந்து கழகம் ஆகியோர் இணைந்து சிறப்பாக செய்திருந்தனர். 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo