Onetamil News Logo

உள்ளாட்சி தேர்தல் 2019ல் நடத்திட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியல்கள் வெளியீடு

Onetamil News
 

உள்ளாட்சி தேர்தல் 2019ல் நடத்திட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியல்கள் வெளியீடு


தூத்துக்குடி 2019 ஏப்ரல் 20 ; தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான  மற்றும் ஆட்சேபனைகள் இருந்தால் எழுத்துப் பூர்வமாக 02.05.2019க்குள் தெரிவிக்கவேண்டும் -மாவட்டதேர்தல் அலுவலர் / மாவட்டஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, தகவல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது... உள்ளாட்சி தேர்தல் 2019ல் நடத்திட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியல்கள் சம்பந்தப்பட்டகிராம ஊராட்சி அலுவலகம்,ஊராட்சி ஒன்றிய அலுவலகம் உள்ளிட்ட இடங்களிலும், நகர்புற உள்ளாட்சிக்கான வரைவு வாக்கு சாவடி பட்டியல்கள் சம்பந்தப்பட்ட மாநகராட்சி அலுவலகம், நகராட்சி அலுவலகம் மற்றும் பேரூராட்சி அலுவலகங்களிலும்,உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) அலுவலகம் மற்றும் மாவட்டஆட்சித் தலைவர் அலுவலகங்களிலும் இன்று வெளியிடப்பட்டுள்ளன.
இவ்வரைவு வாக்குச்சாவடி பட்டியல்கள் மீதுகருத்துக்கள் மற்றும் ஆட்சேபனைகளை தெரிவிக்க விரும்பும் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் தொடர்புடைய அலுவலகங்களில் வெளியிடப்பட்டுள்ள வரைவுவாக்கு சாவடிபட்டியல்களை பார்வையிட்டு தங்களுடைய கருத்துக்கள் மற்றும் ஆட்சேபனைகளைஎழுத்துப் பூர்வமாக சம்பந்தப்பட்ட அலுவலகங்களிலோ அல்லது மாவட்டஆட்சித் தலைவர் அலுவலகத்திலோ எழுத்து மூலமாக 02.05.2019 மாலை 5.45 மணிவரை தெரிவிக்கலாம் என மாவட்டதேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி,  தெரிவித்துள்ளார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo