Onetamil News Logo

தூத்துக்குடி மாவட்டத்தில் காணும் பொங்கல் தினத்தன்று 41 இடங்கள் கண்டறியப்பட்டு டி.எஸ்.பிக்கள் தலைமையில் 1000 போலீசார் பாதுகாப்பு பணி;  எஸ்.பி.தகவல் 

Onetamil News
 

தூத்துக்குடி மாவட்டத்தில் காணும் பொங்கல் தினத்தன்று 41 இடங்கள் கண்டறியப்பட்டு டி.எஸ்.பிக்கள் தலைமையில் 1000 போலீசார் பாதுகாப்பு பணி;  எஸ்.பி.தகவல் 


தூத்துக்குடி 2020 ஜனவரி 14 ;பொங்கல் திருநாளை முன்னிட்டு காணும் பொங்கல் தினத்தன்று தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்கள் சுற்றுலா நிமித்தமாக கூடுமிடங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன் அறிவித்துள்ளார். 
இதுகுறித்து அவரது அறிவிப்பு  ;பொங்கல் திருநாளை முன்னிட்டு காணும்பொங்கல் (16.01.2020) அன்று தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்கள் அருகில் உள்ள இடங்களுக்கு சுற்றுலா செல்வது வழக்கமாக உள்ளது. அவ்வாறு பொதுமக்கள் சுற்றுலா சென்று கூடுமிடங்களாக தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி முத்து நகர் பீச், நேரு பூங்கா, தெர்மல்நகர் பீச், முயல் தீவு, திருச்செந்தூர் கடற்கரை, மணப்பாடு கடற்கரை, மேலப்புதுக்குடி அருஞ்சுனை காத்த அய்யனார் கோவில், கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில், குருமலை அய்யனார் கோவில் உட்பட தூத்துக்குடி காவல் உட்கோட்டத்தில் 10 இடங்களும், தூத்துக்குடி ஊரகத்தில் 2 இடங்களும், திருச்செந்தூர் உட்கோட்டத்தில் 5 இடங்களும், ஸ்ரீவைகுண்டம் உட்கோட்டத்தில் 3 இடங்களும், மணியாச்சியில் 1 இடமும், கோவில்பட்டி உட்கோட்டத்தில் 7 இடங்களும், விளாத்திகுளத்தில் 11 இடங்களும் மற்றும் சாத்தான்குளத்தில் 2 இடங்கள் என மொத்தம் 41 இடங்கள் கண்டறியப்பட்டு டி.எஸ்.பிக்கள் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் மேற்பார்வையில் சுமார் 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபடவுள்ளனர்.
 யாரும் மது போதையில் வாகனங்கள் ஓட்டக்கூடாது, இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் தேவையில்லாமல் சத்தம் கொடுத்துக்கொண்டோ, அதிக அளவு ஒலிப்பான்களை எழுப்பிக்கொண்டோ, வாகனங்களில் போட்டிபோட்டுக்கொண்டோ சாலையில் நடந்து செல்லும் பொதுமக்கள் பீதியடையும் வகையில் வாகனங்களை ஓட்டக்கூடாது.
 மேலும் இருசக்கர வாகனத்தில் செல்பவர்களும், பின் இருக்கையில் அமர்ந்து செல்பவர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும். நான்கு சக்கர வாகனம் ஓட்டுபவர்கள் சீட் பெல்ட் அணிந்து செல்லவேண்டும்.
 பொது இடங்களில் மது அருந்துதல், பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல் போன்ற எவ்வித சட்ட விரோத செயல்களில் யாரும் ஈடுபட கூடாது. அவ்வாறு சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்படி கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொதுமக்கள் காவல்துறையின் அவசர உதவிக்கு ஆண்ட்ராய்டு மொபைல் போன் வைத்திருப்பவர்கள் காவலன் எஸ்.ஓ.எஸ் என்ற செயலியை பயன்படுத்தி நீங்கள் ஆபத்தில் இருப்பதை, அதில் உள்ள பொத்தானை அழுத்துவதன் மூலம் மிக எளிதாக காவல்துறைக்கும் உங்கள் உறவினர்களுக்கும் தகவல் கொடுத்து உங்களை காப்பாற்றிக் கொள்ள முடியும்.
 மேலும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் குறித்த தகவலோ அல்லது பொதுமக்கள் காவல்துறையின் அவசர உதவிக்கோ தொலைபேசி எண் 100 மற்றும் 95141 44100 என்ற அலைபேசி எண் ஆகியவற்றை தொடர்பு கொண்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன்  தெரிவித்துள்ளார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo