Onetamil News Logo

நியூ விங்ஸ் திட்டத்தின்கீழ், துப்புரவு பணியாளர்களின் குழந்தைகள் 2 நபர்களுக்கு ரூ.35,000/- கல்வி உதவித்தொகை

Onetamil News
 

நியூ விங்ஸ் திட்டத்தின்கீழ், துப்புரவு பணியாளர்களின் குழந்தைகள் 2 நபர்களுக்கு ரூ.35,000/-  கல்வி உதவித்தொகை


தூத்துக்குடி 2019 ஜூன் 20; தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நியூ விங்ஸ் திட்டத்தின்கீழ், துப்புரவு பணியாளர்களின் குழந்தைகள் 2 நபர்களுக்கு ரூ.35,000/-  கல்வி உதவித்தொகையினை மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, வழங்கினார்கள்.
தூத்துக்குடி மாவட்டத்தில் துப்புரவு பணியாளர்களின் குழந்தைகள் துப்புரவு பணியில் ஈடுபடுவதை தவிர்ப்பதற்காகவும், அவர்களிடையே உயர் கல்வி கற்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் நியூ விங்ஸ் என்ற திட்டம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்கீழ், ஆதிதிராவிடர், பழங்குடியினர் உள்ளிட்ட மாணவ, மாணவியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டு, அவர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும் வகையில் தொடர்ந்து பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
இன்று (19.06.2019) தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நியூ விங்ஸ் திட்டத்தின்கீழ், கல்வி உதவித்தொகை வழங்குவது தொடர்பான கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் .சந்தீப் நந்தூரி, தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் , துப்புரவு பணியாளர்களின் குழந்தைகள் கல்வி கற்க பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செலுத்த வேண்டிய தொகை குறித்து சம்பந்தப்பட்ட பெற்றோர்கள் மற்றும் மாணவ, மாணவியர்களுக்கு கேட்டறிந்தார்.
அதனைத்தொடர்ந்து, கயத்தார் வட்டத்தை சேர்ந்த மாணவர் பிரவீண் என்பவர் திருநெல்வேலி மனோன்மணியம் பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்சி. கிரிமினாலஜி படிக்க கல்வி உதவித்தொகையாக ரூ.20,000/-க்கான நிதி உதவியும், ஓட்டப்பிடாரம் பசுவந்தனையை சேர்ந்த மாணவி அன்னலட்சுமி என்பவருக்கு ரூ.15,000/-க்கான கல்வி உதவித்தொகை என மொத்தம் துப்புரவு பணியாளர்களின் குழந்தைகள் 2 நபர்களுக்கு ரூ.35,000/-க்கான கல்வி உதவித்தொகையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திரு.தனபதி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் .சண்முகசுந்தரம், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் கவிதா, திருச்செந்தூர் வட்டார போக்குவரத்து அலுவலர் சக்திவேல், தங்கவிலாஸ் பேருந்து சேவை நிறுவனர் ராஜேஷ் மாரிசெல்வம் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo