Onetamil News Logo

தூத்துக்குடியில் சமத்துவ மக்கள் கழகம் ஆலோசனை கூட்டம் ;எர்ணாவூர் நாராயணன் பங்கேற்பு 

Onetamil News
 

தூத்துக்குடியில் சமத்துவ மக்கள் கழகம் ஆலோசனை கூட்டம் ;எர்ணாவூர் நாராயணன் பங்கேற்பு 


தூத்துக்குடி 2020 பிப்ரவரி 21 ;தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம், தூத்துக்குடி தேவர்புரம் ரோட்டிலுள்ள மாவட்ட கட்சி அலுவலகத்தில், மாவட்ட செயலாளர் பி.எம்.அற்புதராஜ் தலைமையில் இன்று நடைபெற்றது.
          சிறப்பு அழைப்பாளராக கட்சியின் நிறுவனத் தலைவர் எர்ணாவூர் நாராயணன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார் இந்நிகழ்ச்சியில் திரளான உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் திறப்பு விழாவில் அதிகமானோர் கலந்து கொள்வது என்றும், கட்சியின் துவக்க நாளை சிறப்பாக கொண்டாடுவது என்றும், மார்ச் 8 ம் தேதி கட்சியின் சார்பில் தூத்துக்குடியில் உலக மகளிர் தின விழா சிறப்பாக கொண்டாடப்படுவது என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இந்த விழாவில் மாநில வர்த்தகரணி துணைச்செயலாளர் ரவிசேகர் ,மாவட்ட பொருளாளர் அருண் சுரேஷ்குமார்,மாவட்ட பிரதிநிதி பழனிவேல்,மாவட்ட தொண்டரணி செயலாளர் முத்துச்செல்வம்,மாவட்ட இளைஞரணி துணைச்செயலாளர் முத்துக்குமார்,மாநகர செயலாளர் உதயசூரியன், தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜேசுஜெயசிங் மாவட்ட பிரதிநிதிகள் முருகேசன், வின்சென்ட்,பெரியசாமி, பழனிவேல், மாவட்ட மாணவரணி செயலாளர் அகஸ்டின், மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் அந்தோணிபிச்சை, மாவட்ட மகளிரணி செயலாளர் குருவம்மாள்,மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர் சதாசிவம், மாவட்ட தொண்டரணி செயலாளர் முத்துச்செல்வம், மாநகர செயலாளர் உதயசூரியன் உள்பட மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo