Onetamil News Logo

தூத்துக்குடியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விற்பனை விலையை கட்டுப்படுத்தக்கோரி சமூக ஆர்வலர் அக்ரி.எஸ்.பரமசிவன் கலெக்டர் யிடம் கோரிக்கை 

Onetamil News
 

தூத்துக்குடியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விற்பனை விலையை கட்டுப்படுத்தக்கோரி சமூக ஆர்வலர் அக்ரி.எஸ்.பரமசிவன் கலெக்டர் யிடம் கோரிக்கை 


தூத்துக்குடி மார்ச் 12 ;  தூத்துக்குடியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விற்பனை விலையை கட்டுப்படுத்தக்கோரி சமூக ஆர்வலர் அக்ரி.எஸ்.பரமசிவன் கலெக்டர் யிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வழங்கிய மனுவில் கூறியதாவது.. தூத்துக்குடி மாவட்டத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கேன்களில் உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் செயல்பாடுகளை சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு செயல்படுத்தவும்,சந்தை விலையினை சாமானிய நுகர்வோர் /பொதுமக்கள் வாங்கும் வகையில் கட்டுப்படுத்துதல் தொடர்பாக கடந்த 08.02.2017 அன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆலோசனை வழங்கப்பட்டு செயல்முறை நடவடிக்கை விதிகள் வழங்கப்பட்டது.
அதன்படி 20லிட்டர் பாட்டில்களில் விற்கப்படும் குடிநீர் ரூ 20/-க்கு மிகாமல் கொள்முதல் (சந்தை)விலை நிர்ணயம் செய்து விற்பனை செய்ய வேண்டும் என்றும்,மேற்படி கேன்களில் நிரப்பப்பட்ட குடிநீர் உற்பத்தி செலவு அடக்கவிலை மற்றும் வண்டி வாடகை ஆகியவற்றை கொண்டு பார்க்கும் போது 20லிட்டர் கொண்ட கேன்கள் ரூ20/-க்கு விற்பனை செய்வது சாத்தியமானதாக கருதப்படுவதாகவும் மேலும் கூட்டுறவு சங்கம் மூலமாகவும் ரூ20/-க்கு மிகாமல் விற்பனை செய்ய வழிவகைகளை ஆய்வு செய்து பொதுமக்களுக்கு வழங்கிடவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
 தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதி மக்களுக்கும் 20லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கேன் விற்பனை விலை ரூ20/-க்கு நிர்ணயம் செய்து விற்பனை செய்திடவும் ,சட்ட விரோத விற்பனை நிறுவனங்களை சீல் வைத்திடவும்,கள ஆய்வு செய்திட மனுவில் கூறி உள்ளார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo