Onetamil News Logo

தூத்துக்குடியில்  2 தளத்திற்கு அனுமதி பெற்று பல தளங்கள் கட்டிய தனியார் வணிக வளாகம்  ;விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கட்டிட கைப்பிடி சுவர்  இடிக்கும் பணி தொடங்கியது ;காங்கீரிட் சுவர் இடிக்க காலதாமதம் செய்வது ஏன்? 

Onetamil News
 

தூத்துக்குடியில்  2 தளத்திற்கு அனுமதி பெற்று பல தளங்கள் கட்டிய தனியார் வணிக வளாகம்  ;விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கட்டிட கைப்பிடி சுவர்  இடிக்கும் பணி தொடங்கியது ;காங்கீரிட் சுவர் இடிக்க காலதாமதம் செய்வது ஏன்? 


தூத்துக்குடி  2019 பிப்ரவரி 14 ; தூத்துக்குடியில்   2 மாடிகள் மட்டுமே கட்ட அனுமதி பெற்றுவிட்டு பல மாடிகள் வரை கட்டி விதிமுறைகளை மீறியுள்ளதாக தூத்துக்குடி மாநகராட்சி இடிக்க உத்தரவு பிறப்பித்துள்ளளது.
 
தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள 8, 8 A மீனாட்சிபுரம் 2-வது தெருவில் சுரேஷ் பால்ராஜ் என்பவருக்கு சொந்தமான வர்த்தக மைய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது.இக்கட்டிடம் விதிமுறைகளை மீறி பல அடுக்கு மாடிகளாக கட்டப்பட்டு உள்ளது.                                                                                                                        
  கட்டிடம் விதிகளை மீறி கட்டப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.  தரை தளம் தொடங்கி 2  தளங்களுக்கு மட்டுமே அனுமதி கொடுக்கப்பட்ட நிலையில் தனியார் வணிக வளாக  உரிமையாளர் விதிகளை மீறி பல தளங்கள் வரை கட்டியுள்ளனர். விதிமுறைக்கு புறம்பாக கட்டிய தளங்களை இடிக்க 4 மாதங்களுக்கு முன்னரே  நோட்டீஸ் கொடுக்கப்பட்டு இடிக்கும் பணியும் கடந்த சில நாட்களாக கைப்பிடி சுவர் மட்டும் இடிக்கத்  தொடங்கியது.மேல் தளம் மற்றும் ஜன்னல் கதவுகள்  தற்போது வரை இடிக்கப்படாமல் நிலுவையில் உள்ளது .இக் கட்டிடத்தை இடிக்க மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் 4 மாதங்களுக்கு முன்னரே கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. 
  
தூத்துக்குடி மாநகராட்சி அதிகாரியின் துரித நடவடிக்கையால் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கட்டிடங்களை அடையாளம் கண்டு இடிக்கும் நடவடிக்கை மேற்கொன்டு வருகிறது.
மேலும் இதுபோல் தூத்துக்குடி மாநகராட்சியில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கட்டிடங்கள் மற்றும் ஆக்கிரமிப்பு களை மாநகராட்சி கண்டறிந்து துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் தூத்துக்குடியில்  விதிமுறைகளை மீறி வாகன நிறுத்தம் கூட இல்லாமல் கட்டிய 100க்கும் மேற்பட்ட   வணிக நிறுவன கட்டிடங்களுக்கு சீல் எப்பொழுது வைக்கப்படும் . என்று சமூக ஆர்வலர் வக்கீல் செல்வம் கிறிஸ்டோபர் தெரிவித்தார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo