Onetamil News Logo

தூத்துக்குடி விமான நிலையத்தில் ரூ.380 கோடியில் புதிய விமான முனையம் 

Onetamil News
 

தூத்துக்குடி விமான நிலையத்தில் ரூ.380 கோடியில் புதிய விமான முனையம் 


 தூத்துக்குடி 2019 நவம்பர் 11 ;தூத்துக்குடியில் இருந்து டெல்லி உள்ளிட்ட முக்கிய பகுதிகளுக்கு விமான சேவை தொடங்க மத்திய அரசு மூலம் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று கனிமொழி எம்.பி செய்தியாளர்களிடம் கூறினார். 
தூத்துக்குடியில் விமான நிலையத்தில் ரூ.380 கோடியில் புதிய விமான முனையம் மற்றும் வளர்ச்சி பணிகள் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என விமான நிலைய இயக்குனர் என். சுப்ரமணியன் கூறியுள்ளார்.
தூத்துக்குடி விமான நிலைய ஆலோசனை குழு கூட்டம் மக்களவை உறுப்பினரும், விமான நிலைய ஆலோசனை குழு தலைவருமான கனிமொழி கருணாநிதி தலைமையில் இன்று நடைபெற்றது. 
இந்த கூட்டத்தில் பயணிகளுக்கு தேவையான வசதிகளை மேம்படுத்துவது, இரவு நேர விமான சேவை, தூத்துக்குடியிலிருந்து சென்னை தவிர பிற முக்கிய பகுதிகளுக்கு விமான சேவையை இயக்குவது, சரக்கு போக்குவரத்து விமான சேவை, கூடுதலாக நிலம் கையகபடுத்துவது போன்றவை குறித்து ஆலோசிக்கப்பட்டன. 
இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட கனிமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில்,விமான நிலைய விரிவாக்க பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். துறைமுகம், தொழிற்சாலைகள், சுற்றுலா பகுதிகள் கொண்ட இந்த பகுதி முன்னேற்றத்திற்காக தூத்துக்குடி விமான நிலையத்தை மேம்படுத்துவது மிக மிக முக்கியம். இங்கிருந்து டெல்லி உள்ளிட்ட முக்கிய பகுதிகளுக்கு விமான சேவை தொடங்க மத்திய அரசு மூலம் முயற்சிகள் மேற்கொள்ளப்படும். அனைத்து தரப்பு மக்களும் விமான சேவைகளை பயன்படுத்துவது அதிகரித்துள்ளதால் விமான நிலையங்களிலும் அந்தந்த பகுதிகளுக்கு செல்லும் விமானத்திலும் அந்தந்த பிராந்திய மொழிகளில் அறிவிப்பு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தூத்துக்குடி விமான நிலைய இயக்குநர் என்.சுப்பிரமணியன் கூறுகையில், தூத்துக்குடி விமான நிலையத்தில் இரவு நேர விமானங்கள் இயக்குவதற்காக விரிவாக்கப்பணிகள் முடிவடைந்து விட்டன. விமான நிலைய அருகேயுள்ள வல்லநாடு மலையில் எச்சரிக்கை விளக்கு அமைப்பதற்காக வனத்துறை ஒப்புதல் பெறவேண்டியுள்ளது. ஒப்புதல் பெற்ற பின்னர் அந்த பணி முழுமையடையும். அதனை தொடர்ந்து இரவு நேர விமானங்கள் இயக்கப்படும். இந்த பணிகள் இன்னும் நான்கு மாதங்களில் முடிவடையும்.
தொடர்ந்து தூத்துக்குடி விமான நிலையத்திலிருந்து மேலும் பல பகுதிகளுக்கும் விமான சேவை இயக்குவதற்காக விமான ஓடு பாதையை 3115 மீட்டர் அளவிற்கு நீளப்படுத்தவும், புதிய விமான முனையம் அமைப்பதற்காகவும் 380 கோடி ரூபாய் மதிப்பில் திட்டமிடப்பட்டுள்ளன. இந்த விரிவாக்கம் செய்யப்பட்ட பின் ஒரு நேரத்தில் 600 பயணிகள் வரை புறப்பாடு செய்ய முடியும். இந்த பணிகள் முடிவடைந்த பின் இங்கிருந்து கொச்சி, மும்பை, ஹைதராபாத், கோவை உள்ளிட்ட பகுதிகளுக்கு கூடுதல் விமானங்கள் இயக்க வாய்ப்பு உள்ளது என்றார்.இந்த பணி முழுமையாக முடிவடைய 3 ஆண்டுகள் ஆகும் என்றார்.முன்னதாக கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட கூடுதல் ஆட்சியர் விஷ்னு சந்திரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo