Onetamil News Logo

புதிய தலைமைச் செயல் அலுவலர் பங்கஜ் குமாரை வரவேற்கும் ஸ்டெர்லைட் காப்பர்

Onetamil News
 

புதிய தலைமைச் செயல் அலுவலர் பங்கஜ் குமாரை வரவேற்கும் ஸ்டெர்லைட் காப்பர்


தூத்துக்குடி 2019 மார்ச் 15 ;ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலராக பங்கஜ் குமார் உடனடியாக பொறுப்பேற்கிறார்
-                                                                                                                                 இதுவரை தலைமைச் செயல் அலுவலராக பொறுப்புவகித்த பி. ராம்நாத்,முதுநிலை ஆலோசகராக பணியினை தொடர்கிறார்
 ஸ்டெர்லைட் காப்பர், அதன் இயக்க செயல்பாடுகளுக்கு புதிய தலைமைச் செயல் அலுவலராக பங்கஜ்குமார் நியமனம் செய்யப்பட்டிருப்பதை இன்று அறிவித்திருக்கிறது.  ஸ்டெர்லைட் காப்பர்  நிர்வாக செயல்பாடுகளுக்கும் கூடுதலாக, மால்கோ எனர்ஜி லிமிடெட் (MEL) மற்றும் ஃபுஜாய்ரா கோல்டு (FZH) நிறுவன செயல்பாடுகளும் இவரது கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும்.  
                                                                                                                           தொழில்துறையில் ஏறக்குறைய 29 ஆண்டுகள் பணியாற்றி, வளமான தொழில் அனுபவத்தையும், நிபுணத்துவத்தையும் கொண்டிருக்கும்  குமார், இதற்கு முன்பு இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்தில் தலைமை இயக்க அதிகாரி மற்றும் இயக்குனர் – உருக்காலை என்ற பொறுப்பில் பணியாற்றியவர்.  அதற்கு முன்பாக, டாடா ஸ்டீல் , மிட்டல் ஸ்டீல் மற்றும் அதானி போர்ட்ஸ் போன்ற பல்வேறு பெருநிறுவனங்களில் உயர் பொறுப்புகளை இவர் வகித்திருக்கிறார்.  கடந்த 8 ஆண்டுகளாக ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலராக பணியாற்றிய  பி. ராம்நாத், பணி ஓய்வு பெற்றிருக்கிறார்.  எனினும், இந்நிறுவனத்திற்கு முதுநிலை ஆலோசகர் என்ற புதிய பொறுப்பில் ஸ்டெர்லைட் நிறுவனத்துடனான தனது பிணைப்பை அவர் தொடர்வார்.
                                                                                                                    இந்நிறுவனத்திற்கான தனது தொலைநோக்கு திட்டம் மற்றும் குறிக்கோள் குறித்துப் பேசிய பங்கஜ் குமார், “எனது சொந்த இல்லம் போன்ற ஒரு இடத்திற்கு மீண்டும் வந்திருப்பது எனக்கு கிடைத்திருக்கும் ஒரு கௌரவமாகும்.  ஏற்கனவே ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்தில் இதற்கு முன்பு பணியாற்றியிருப்பதால், மக்கள் மற்றும் பணியாளர்களின் நலனை முதன்மையாக கருதுகின்ற நிறுவனமாக ஸ்டெர்லைட் காப்பர் இருக்கிறது என்று என்னால் உறுதியாகவும், நேர்மறையாகவும் கூறமுடியும்.  இந்த அம்சத்தில் எதுவும் மாறிவிடவில்லை.  இந்த பிராந்தியத்திற்கும் மற்றும் இந்த மக்களுக்கும் முன்னேற்றத்திற்கான பல சிறப்பான செயல்திட்டங்கள், அமல்படுத்தப்படுவதற்கான பல்வேறு நிலைகளில் இருந்துவருகின்ற நிலையில், இங்கு இப்பொறுப்பிற்கு நான் வந்திருக்கிறேன்.  என்னால் முடிந்தவரை அனைத்து வகையிலும் நமது சமூகத்திற்கு சேவையாற்றுவதற்கு நான் உறுதியும், உற்சாகமும் கொண்டிருக்கிறேன்,” என்று கூறினார்.                                                                                                                                                                                       பணி ஓய்வுபெற்று செல்லும் முன்னாள் தலைமைச் செயல் அலுவலரான ராம்நாத், பங்கஜ் குமார் அவர்களை வரவேற்று வாழ்த்திப் பேசுகையில், “தலைமைச் செயல் அலுவலராக இங்கு எனது பதவிக்காலமானது, பல சாதனைகளும், சவால்களும் நிறைந்த ஒரு பயணமாக இருந்திருக்கிறது.  எந்த ஒரு பயணத்திலும் இருப்பதைப்போலவே இதிலும் எண்ணற்ற ஏற்றங்களும், இறக்கங்களும் இருந்திருக்கின்றன.  எனினும், சிறிதளவு கூட மாறாமல் தொடர்ந்து உறுதியாக இருக்கப்போகும் ஒரு விஷயம் என்னவென்றால், அது தூத்துக்குடி மக்களின் நலன் மற்றும் முன்னேற்றம் மீதான எங்களது பொறுப்புறுதிதான்.  எந்தவொரு விஷயமும் இதையும் தாண்டி முன்னுரிமை பெறுவதாக ஒருபோதும் இருக்காது” என்று கூறினார்.
புதிய தலைமைச் செயல் அலுவலராக இன்று பொறுப்பேற்றிருக்கும்  பங்கஜ் குமார், கடந்த காலத்தில் ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்தின் தலைமை இயக்க அதிகாரியாக பணியாற்றியவர்.  தூத்துக்குடி நகரில் அமைந்துள்ள இந்நிறுவனத்தின் பயணமானது, ஒரு மிக முக்கிய காலகட்டத்தில் இருக்கின்ற நிலையில் ஸ்டெர்லைட் காப்பரின் தலைமை பொறுப்பை இவர் ஏற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.  
வேதாந்தா லிமிடெட் குறித்து :
வேதாந்தா லிமிடெட் (Vedanta Ltd) என்பது, பன்முக செயல்பாடுள்ள இயற்கை ஆதாரவள நிறுவனமாகும். உலோகங்கள் மற்றும் எண்ணெய் & எரிவாயு ஆகியவற்றை கண்டறிந்து, சுத்திகரித்து பயன்பாட்டுக்கு வழங்குவது இதன் பிரதான தொழில் செயல்பாடாக இருக்கிறது. கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு, சிங்க், ஈயம், வெள்ளி, தாமிரம், இரும்பு தாது, அலுமினியம் & வர்த்தக ரீதியிலான மின்சக்தி ஆகியவற்றை இந்நிறுவனம் தயாரித்து வழங்குகிறது. இந்தியாவிலும் தென்னாப்பிரிக்கா, நமீபியா, அயர்லாந்து மற்றும் ஆஸ்திரேலியா, லைபீரியா மற்றும் ஸ்ரீலங்கா ஆகிய நாடுகளில் இந்நிறுவனம் தொழில் பிரிவுகளை கொண்டிருக்கிறது.
வேதாந்தா லிமிடெட் என்பது, இலண்டன் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனமான வேதாந்தா ரிசோர்ஸஸ் பிஎல்சி-ன் இந்தியாவுக்கான ஒரு துணை நிறுவனமாகும். ஆரோக்கியம், பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் மீது ஒரு உறுதியான கூர்நோக்கத்தோடும் மற்றும் உள்ளுர் சமூகங்களின் வாழ்க்கையை மேம்படுத்துவது மீதும் அக்கறை கொண்டுள்ள நிலைக்கத்தக்க முன்னேற்றம் என்பதுதான் வேதாந்தாவின் கருத்தியல் மற்றும் செயல்உத்தியின் மையமாக இருக்கிறது. வேதாந்தா லிமிடெட், இந்தியாவில் மும்பை பங்குச்சந்தை மற்றும் தேசிய பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டிருக்கிறது. அத்துடன், நியூயார்க் பங்குச்சந்தையில் இதன் ADR-கள் பட்டியலிடப்பட்டிருக்கின்றன.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo