Onetamil News Logo

தூத்துக்குடியில் அடையாளம் தெரியாத ஆண் பிணம்

Onetamil News
 

தூத்துக்குடியில் அடையாளம் தெரியாத ஆண் பிணம்     


 தூத்துக்குடி 2019 மே 20 ; தூத்துக்குடி அருகே உள்ள  தூத்துக்குடி - திருச்செந்தூர் சாலையோரம் உப்பாத்து ஓடை முன்பு அடையாளம் தெரியாத 46 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனே முத்தையாபுரம் போலீசுக்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில்  போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பிணத்தை பார்வையிட்டனர்.
அதில் அவரது உடலில் காயங்கள் இருந்ததை கண்டனர். இது பற்றி விசாரித்ததில் இறந்து கிடந்தவர் யார்? எந்த ஊர்? என்பது பற்றிய எந்த வித தகவலும் கிடைக்கவில்லை.
இதையடுத்து அவரின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து யாராவது கொலை செய்து உடலை வீசி சென்றார்களா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo