Onetamil News Logo

தூத்துக்குடி கேம்ஸ்வில் உள்விளையாட்டு அரங்கில் புதிய விளையாட்டு போட்டியான ஸ்குவாஷ் போட்டி ;அமைச்சர் தொடங்கிவைத்தார்.

Onetamil News
 

தூத்துக்குடி கேம்ஸ்வில் உள்விளையாட்டு அரங்கில் புதிய விளையாட்டு போட்டியான ஸ்குவாஷ் போட்டி ;அமைச்சர் தொடங்கிவைத்தார். 


தூத்துக்குடி 2020 ஜனவரி 28 ;தூத்துக்குடி ஏ.பி.சி.மகாலெட்சுமி கல்லூரி அருகில் கேம்ஸ்வில் உள் விளையாட்டு அரங்கில் ஸ்குவாஷ் விளையாட்டு போட்டியை மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ  துவக்கி வைத்தார்.
தூத்துக்குடி ஏ.பி.சி.மகாலெட்சுமி கல்லூரி அருகில் கேம்ஸ்வில் உள் விளையாட்டு அரங்கில் ஸ்குவாஷ் விளையாட்டு போட்டி துவக்க விழா மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, தலைமையில் இன்று (28.01.2020) நடைபெற்றது. இவ்விழாவில்  செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ  கலந்து கொண்டு, ஸ்குவாஷ் விளையாட்டு போட்டியை துவக்கி வைத்தார்.
பின்னர்,செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ பேசியதாவது:-
தூத்துக்குடி மாவட்டத்தில்  தமிழ்நாடு முதலமைச்சர்  கல்வித்துறை சார்பில் மாநில அளவில் புதிய விளையாட்டு போட்டிகளான டேக்வாண்டோ  ஸ்குவாஷ்  மற்றும் கடற்கரை கையூந்து பந்து போட்டிகளை நடத்திட உததரவிட்டுள்ளார்கள். அதனடிப்படையில், தருவை விளையாட்டு மைதானத்தில் டேக்வாண்டோ போட்டி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. கேம்ஸ்வில் உள்விளையாட்டு அரங்கில் புதிய விளையாட்டு போட்டியான ஸ்குவாஷ் போட்டி நடத்தப்படுகிறது. தருவைகுளத்தில் கடற்கரை கையூந்து பந்து போட்டி நடத்தப்படுகிறது. நமது மாநிலத்தில் அனைத்து மாவட்டத்திலிருந்தும் 1,500 மாணவர்களும்,   1,500 மாணவிகளும் நமது மாவட்டத்திற்கு வருகை தந்து இப்போட்டிகளில் பங்கேற்க உள்ளார்கள். மாணவ, மாணவியர்களுக்கு முதல் பரிசாக ரூ.1,500ஃ-க்கான காசோலையும், இரண்டாம் பரிசாக ரூ.8,00ஃ- க்கான காசோலையும், மூன்றாம் பரிசாக ரூ.5,00ஃ-க்கான காசோலையும் வழங்கப்படுகிறது. பள்ளி கல்வித்துறையின் மூலம் இதற்கான சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அம்மா இளைஞர் விளையாட்டு திட்டத்தின் மூலம் நமது மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் மைதானங்கள் அமைக்கப்பட்டு கிரிக்கெட், கபடி, வாலிபால் போட்டிகள் மற்றும் பயிற்சிகள் நடத்தப்பட உள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் விளையாட்டு வீரர்களின் எண்ணிக்கை அதிகரித்து உலகளவில் சிறந்து விளங்க முடியும். மேலும், கிராமப்புற இளைஞர்களுக்கு இதுவொரு பொழுதுபோக்கு அம்சமாக திகழும் இத்திட்டங்களை தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு வீரர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என பேசினார். 
  இவ்விழாவில், சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.பி.சண்முகநாதன்  (திருவைகுண்டம்), போ.சின்னப்பன் (விளாத்திக்குளம்), மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர் இரா.சத்யா, மாவட்ட அறங்காவல் குழுத் தலைவர் மோகன்,  மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ரா.சுதாகர், முக்கிய பிரமுகர் ஆறுமுகநயினார், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அ.ஞானகௌரி, ஸ்குவாஷ் போட்டி பொறுப்பாளர் எஸ்.ஏ.வி மேல்நிலைப்பள்ளி உடற்பயிற்சி ஆசிரியர் குப்புசாமி, கேம்ஸ்வில் உள்விளையாட்டு அரங்க நிறுவனர் ரைபின் தார்ச்சியூஸ்  மற்றும் பள்ளி கல்வித்துறை அலுவலர்கள், மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர். 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo