Onetamil News Logo

பசுபதிபாண்டியன் 7ம் ஆண்டு நினைவுநாள் ;தூத்துக்குடியில் தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு தலைவர்  நினைவு தினம். ஏராளமானவர்கள் அஞ்சலி  மாவட்டம் முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு  

Onetamil News
 

பசுபதிபாண்டியன் 7ம் ஆண்டு நினைவுநாள் ;தூத்துக்குடியில் தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு தலைவர்  நினைவு தினம். ஏராளமானவர்கள் அஞ்சலி  மாவட்டம் முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு  


தூத்துக்குடி 2018 ஜன 10:பசுபதிபாண்டியன் 7ம் ஆண்டு நினைவுநாள் ;தூத்துக்குடியில் தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு தலைவர்  நினைவு தினம். ஏராளமானவர்கள் அஞ்சலி  மாவட்டம் முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.                                                                                                    
                        
தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் நிறுவனத்தலைவர் பசுபதி பாண்டியன் கடந்த 2012ம் ஆண்டு ஜனவரி 10ம் தேதி அன்று இரவு திண்டுக்கல் மாவட்டம் நந்தவனபட்டியில் உள்ள அவரது வீட்டு முன் ஒரு கும்பலால் வெட்டிபடுகொலை செய்யப்பட்டார். இவரது உடலை சொந்த கிராமமான   தூத்துக்குடியில் உள்ள அலங்காரதட்டு கிராமத்தில் அடக்கம் செய்யப்பட்டது இதைத் தொடர்ந்து பசுபதிபாண்டியனின் 7ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது. இதில் பசுபதிபாண்டியன் ஆதரவாளர்கள் மற்றும் அரசியல் கட்சியை சேர்ந்தவர்களும் தூத்துக்குடி அலங்காரந்தட்டு பகுதியில் உள்ள   பசுபதிபாண்டியன் சமாதியில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்  தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமானவர்கள் கலந்து கொள்வதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர் மேலும் மாவட்டத்தில் பல இடங்களிலும் போலீஸ் சோதனைச்சாவடிகளும் அமைக்கப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பசுபதிபாணிடியனின் நினைவு நாளான இன்று எந்தவித அம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் இருப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 144 தடை உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் மாவட்டம் முழுவதும்  ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர் பசுபதிபாண்டியனின் நினைவு தினத்தில் அஞ்சலி செலுத்த வருபவர்களிடம் காவல்துறையினார் கடும்நெருக்கடி கொடுத்து வருவதாகவும் இதை கண்டித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தப்படும் என தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்புத் தலைவர் பார்வதி சண்முகசாமி தெரிவித்துள்ளார். தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு மாவட்டத் தலைவர் பேதுரு பிள்ளை முன்னிலை வகித்தார்.தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு மாவட்ட செயலாளர் ரமேஷ்பாண்டியன்,மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மகேஸ்வரன், வக்கீல் ஸ்ரீனிவாசன்,மாவட்ட பொருளாளர் விவேக் பாண்டியன், விக்கிரமராஜா, மாரிமுத்துபாண்டியன்,கிஷோர் பாண்டியன்,தங்கமாரியப்பன்     உட்பட பலர் கலந்து கொண்டனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo