Onetamil News Logo

ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலைவழக்கு முக்கிய சாட்சியான ஏட்டு ரேவதி தூத்துக்குடியில்  மாஜிஸ்திரேட்டு முன்பு ஆஜராகி வாக்குமூலம் ;பரபரப்பு 

Onetamil News
 

ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலைவழக்கு முக்கிய சாட்சியான ஏட்டு ரேவதி தூத்துக்குடியில்  மாஜிஸ்திரேட்டு முன்பு ஆஜராகி வாக்குமூலம் ;பரபரப்பு 


தூத்துக்குடி ஜூலை 04 ;ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலைவழக்கு முக்கிய சாட்சியான ஏட்டு ரேவதி தூத்துக்குடியில்  மாஜிஸ்திரேட்டு முன்பு ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.
சாத்தான்குளத்தில் ஊரடங்கை மீறியதாக வியாபாரிகள் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரை போலீசார் அழைத்து சென்று தாக்கினர். இதைத்தொடர்ந்து அவர்கள் 2 பேரும் இறந்தனர்.இதனால் சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளை தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து, மாஜிஸ்திரேட்டு விசாரணைக்கு உத்தரவிட்டது. அதன்பேரில் கோவில்பட்டி மாஜிஸ்திரேட்டு பாரதிதாசன் சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் விசாரணை நடத்தினார். 
நீதித்துறை நடுவரிடம் தலைமைக் காவலர் ரேவதி அளித்த வாக்குமூலம், சம்பவ தினத்தன்று நடந்த விவகாரங்களை விரிவாக விவரிக்கிறது.
கைதிகள் இருவரையும் அங்கிருந்த காவலர்கள் விடிய விடிய லத்தியால் அடித்ததாகவும் அதில் லத்தி மற்றும் டேபிளில் கரை படிந்துள்ளதாகவும் அதனை அவர்கள் அழிக்க நேரிடும் என்றும் உடனடியாக அதனைக் கைப்பற்ற வேண்டுமென்றும் கூறினார். சாட்சி கூறிய லத்திகளைக் கைப்பற்றும் பொருட்டு அங்கிருந்த காவலர்களை லத்தியைக் கொடுக்கும்படி கூறியும் அவர்கள் காதில் ஏதும் விழாததுபோல இருந்தார்கள்.’’
’’பிறகு கட்டாயப்படுத்தியதன் பேரில் அனைவரும் அவர்களது லத்தியைக் கொடுத்துவிட்டார்கள். அதில் மகராஜன் என்பவர் என்னைப் பார்த்து ’உன்னால் ஒன்றும் ..... முடியாதுடா’ என்று என் முதுகுக்குப் பின்னால் என் காதில் விழும்படி பேசி, அங்கு ஓர் அசாதாரண சூழ்நிலையை உருவாக்கினார்" என சாத்தான்குளம் காவல் நிலையத்தில் நடந்த சம்பவங்களை நீதித் துறை நடுவர் விவரித்துள்ளார்.
அங்கிருந்த சூழல் சரியில்லாததால் சாட்சியம் அளித்த தலைமைக் காவலர் ரேவதி கையெழுத்திட மறுத்துவிட்டதாகவும் அவரிடம் பாதுகாப்பு குறித்து உறுதியளித்த பின் கையெழுத்துப் பெறப்பட்டதாகவும் நீதித் துறை நடுவர் தெரிவித்துள்ளார். விசாரணையில் அவர் பல தகவல்களை தெரிவித்து உள்ளார். 
இதனால் தான் இந்த வழக்கு சூடு பிடித்தது. இதனால் ஏட்டு ரேவதிக்கு உரிய பாதுகாப்பு அளிக்க கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்பேரில், அவருடைய வீட்டுக்கு 4 போலீசார் பாதுகாப்பு போடப்பட்டது. இந்த வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஏட்டு ரேவதியை முக்கிய சாட்சியாக சேர்த்து உள்ளனர். 
சி.பி.சி.ஐ.டி. துணை போலீஸ் சூப்பிரண்டு அனில்குமார் தலைமையிலான போலீசார் நேற்று காலை 9.30 மணி அளவில் தூத்துக்குடி கோர்ட்டுக்கு ஏட்டு ரேவதியை அழைத்து வந்தனர்.பின்னர் ஏட்டு ரேவதியை தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு ஹேமா முன்னிலையில் ஆஜர்படுத்தினர். அவர் மாஜிஸ்திரேட்டிடம் சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் நடந்த சம்பவங்கள் குறித்து தனிமையில் வாக்குமூலம் அளித்து உள்ளார்.அதனை தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு பதிவு செய்து கொண்டார். 
தொடர்ந்து மாவட்ட முதன்மை நீதிபதி லோகேசுவரனும் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த விசாரணை முடிவடைந்து மாலை 5.30 மணிக்கு ரேவதி வெளியே வந்தார்.அதன்பிறகு சி.பி.சி.ஐ.டி. போலீசார், ஏட்டு ரேவதியை பாதுகாப்பாக தூத்துக்குடி சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு சம்பவங்கள் குறித்து சி.பி.சி.ஐ.டி போலீசாரும் விசாரணை நடத்தினர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo