Onetamil News Logo

தூத்துக்குடியில் காக்கா போட்ட கம்பியால் மின்சாரம் வீடுகளுக்குப் பாய்ந்து வாலிபர் பலி

Onetamil News
 

தூத்துக்குடியில் காக்கா போட்ட கம்பியால் மின்சாரம் வீடுகளுக்குப் பாய்ந்து வாலிபர் பலி      


 தூத்துக்குடி 2019 மே 22 ; தூத்துக்குடி டூவிபுரம் 2ம் தெரு பகுதியில் புதிதாக செல்வம் வீடு கட்டி வருகிறார். இவரது வீட்டில் இன்று  கட்டிட பணிகள் நடைபெற்றன. இந்த பணியில் கும்பகோணத்தை சேர்ந்த வாலிபர் சிபி (வயது 22) சித்தாள் பணியில் ஈடுபட்டு இருந்தார்.
இன்று மாலையில் வேலை செய்து கொண்டு இருந்த போது எதிர்பாராத விதமாக காக்கா மின்கம்பியில் நீளமான மின்கம்பியை தூக்கி போட்டுள்ளது.அது எர்த் வயிறில் பட்டு பக்கத்தில் உள்ள வீடுகளிலும்  மின்சாரம் தாக்கியது. இதில் எர்த் வயரை பிடித்துக்கொண்டிருந்த சிபி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இறந்து கிடப்பதை பார்த்து அருகில் இருந்த அனைவரும் அதிர்ச்சியடைந்தார்கள்.
இது பற்றி தென்பாகம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜீன்குமார்   மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சிபி  உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

 

 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo