Onetamil News Logo

அஇஅதிமுக தெற்கு மாவட்ட கழக நிர்வாகிகளின் ஆலோசனைக்கூட்டம் வரும்16ம் தேதி அன்று தூத்துக்குடியில் நடைபெறும் ;எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ விடுத்துள்ள அறிக்கை

Onetamil News
 

அஇஅதிமுக தெற்கு மாவட்ட கழக நிர்வாகிகளின் ஆலோசனைக்கூட்டம் வரும்16ம் தேதி அன்று தூத்துக்குடியில் நடைபெறும் ;எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ விடுத்துள்ள அறிக்கை


தூத்துக்குடி 2020 பிப்ரவரி 14 ;மறைந்த தமிழக முதல்வர் அம்மாவின் 72வது பிறந்தநாள் விழா மற்றும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி தூத்துக்குடி வருகை. தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ அறிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது.....
வருகிற (24.02.2020) அன்று மறைந்த தமிழக முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 72வது பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. மேலும், தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு அரசு திட்டப் பணிகள் துவங்கி வைக்கும் விழாக்களில்  பங்கேற்க அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமி  தூத்துக்குடி வருகை தருகிறார்கள். மாண்புமிகு அம்மா பிறந்தநாள் விழா, முதலமைச்சர் எடப்பாடியார் வருகை இந்த இரு பெரும் நிகழ்வில் பங்கேற்ப்பது குறித்த தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக நிர்வாகிகளின் ஆலோசனைக்கூட்டம் நாளை (16.02.2020) அன்று காலை 10.30 மணிக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் வைத்து எனது தலைமையில் நடைபெறுகிறது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தலைமைக்கழக நிர்வாகிகள், இந்நாள், முன்னாள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்கின்றனர். இந்த ஆலோசனைக்கூட்டத்திற்கு மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூராட்சி கழக நிர்வாகிகள், தூத்துக்குடி மாநகர வட்ட கழக செயலாளர்கள், மாவட்ட சார்பு அணிகளின் பொறுப்பாளர்கள், உள்ளாட்சி அமைப்பு  மற்றும் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் தவறாமல் கலந்துகொள்ள அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளது.

 

 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo