Onetamil News Logo

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மீனவர்கள் 2019 ஏப்ரல் 15 முதல் ஜுன் 14 தேதி வரை மீன்பிடிக்க, மீன்பிடி விசைப்படகுகள் மற்றும் இழுவைப்படகுகள் கடலுக்கு செல்லக்கூடாது ;கலெக்டர் தகவல் 

Onetamil News
 

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மீனவர்கள் 2019 ஏப்ரல் 15 முதல் ஜுன் 14 தேதி வரை மீன்பிடிக்க, மீன்பிடி விசைப்படகுகள் மற்றும் இழுவைப்படகுகள் கடலுக்கு செல்லக்கூடாது ;கலெக்டர் தகவல் 


தூத்துக்குடி 2019 ஏப்ரல் 14;  தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மீனவர்கள் 2019 ஏப்ரல் 15 முதல் ஜுன் 14 தேதி வரை மீன்பிடிக்க, மீன்பிடி விசைப்படகுகள் மற்றும் இழுவைப்படகுகள் கடலுக்கு செல்லக்கூடாது என அறிவுறுத்தப்படுகிறது- மாவட்ட ஆட்சித்தலைவர் /மாவட்டதேர்தல் அலுவலர் சந்தீப் நந்தூரி, தகவல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது...தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்கு படுத்தும் சட்டம் 1983-ன் கீழ் தமிழகத்தின் கிழக்கு கடற்கரைப் பகுதியில் மீன் இனப் பெருக்கக்காலத்தை கருத்தில் கொண்டும் மீன்வளத்தை பாதுகாக்கும் பொருட்டும்,திருவள்ளுர் மாவட்டம் முதல் கன்னியாகுமரி மாவட்டம் கன்னியாகுமரி நகரம் வரை ஒவ்வொரு ஆண்டும் 61நாட்கள்,அதாவது ஏப்ரல் 15 முதல் ஜுன் 14 தேதி வரை (இருநாட்களும் உள்பட)உள்ள கால அளவில் மீன்பிடி விசைப்படகுகள் மற்றும் இழுவைப்படகுகள் கொண்டு கடலில் மீன்பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு அரசாணை வழங்கப்பட்டுள்ளது.
எனவே,அரசாணையின் படி இந்தஆண்டு 2019 ஏப்ரல் 15 முதல் ஜுன் 14 தேதிவரை (இருநாட்களும் உள்பட) தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மீனவர்கள் மீன்பிடிக்க,மீன்பிடி விசைப்படகுகள் மற்றும் இழுவைப்படகுகள் கடலுக்கு செல்லக்கூடாது என அறிவுறுத்தப்படுகிறது என மாவட்டஆட்சித்தலைவர் /மாவட்டதேர்தல் அலுவலர் சந்தீப் நந்தூரி, தெரிவித்துள்ளார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo