Onetamil News Logo

தாமிரபரணி மஹா புஷ்கர விழாவை மாவட்ட எஸ்.பி. முரளி ரம்பா,தலைமையில் ஆலோசனை கூட்டம் ;3 எஸ்.பிக்கள் ,, 5 ஏ.டி.எஸ்;.பிக்கள், 16 டி.எஸ்.பிக்கள் உட்பட சுமார் 3000 போலீசார் குவிப்பு

Onetamil News
 

தாமிரபரணி மஹா புஷ்கர விழாவை மாவட்ட எஸ்.பி. முரளி ரம்பா,தலைமையில் ஆலோசனை கூட்டம் ;3 எஸ்.பிக்கள் ,, 5 ஏ.டி.எஸ்;.பிக்கள், 16 டி.எஸ்.பிக்கள் உட்பட சுமார் 3000 போலீசார் குவிப்பு


தூத்துக்குடி 2018 அக்டோபர் 9 ; தாமிரபரணி மஹா புஷ்கர விழாவை முன்னிட்டு பக்தர்கள் புனித நீராடுவதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து இன்று மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் மாவட்ட எஸ்.பி. முரளி ரம்பா,  தலைமையில் ஆலோசனை கூட்டம்  நடைபெற்றது.
                                                                                                                                    தாமிரபரணி மஹா புஷ்கர விழா 11.10.2018 முதல் 23.10.2018 வரை 13 நாட்கள் நடைபெற உள்ளது. இவ்விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் பக்தர்கள் புனித நீராடுவதற்கு முறப்பநாடு, அகரம், நாணல்காடு, ஆழிக்குடி, கருங்குளம், ஸ்ரீவைகுண்டத்தில் கள்ள பிரான்கோவில் அருகில், ஆழ்வார்திருநகரி திருசங்கனை, அகோப்பில்லா, காந்தீஸ்வரர், பட்சிராஜன், நாயக்கர், பிள்ளையார்கோவில், தோணித்துறை, பால்குளம், தென்திருப்பேரை, குரங்கனி, ஏரல் இரட்டை திருப்பதி, மங்களகுறிச்சி, சேர்மன்கோவில், வாழவல்லான், உமரிக்காடு, சேதுக்குவாய்த்தான், சொக்கப்பழக்கரை, முக்காணி ஆற்றுப்பாலம் மேற்கு மற்றும் கிழக்கில் 2 இடங்கள், சேர்ந்த பூமங்களத்தில் 2 இடங்கள் ஆக மொத்தம் 29 இடங்களில் படித்துறைகள் கண்டறியப்பட்டுள்ளன.  மேற்கண்ட இந்தப்படித்துறைகளில், எந்தப்படித்துறைகளிலும் பொதுமக்கள் புனித நீராடலாம்.  3 எஸ்.பிக்கள் தலைமையில், 5 ஏ.டி.எஸ்;.பிக்கள், 16 டி.எஸ்.பிக்கள் உட்பட சுமார் 3000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.                                                                                                                                                     சிறப்பு பயிற்சி பெற்ற 90 காவல் ஆளினர்கள் அடங்கிய பேரிடர் மீட்பு குழுவினரும், மீன் வளத்துறையிலிருந்து 24 படகுகளும், தீயணைப்புத்துறையிலிருந்து 3 படகுகளும் இப்பணிக்கு ஈடுபடுத்தப்படவுள்ளது என்று  மாவட்ட எஸ்.பி.  முரளி ரம்பா,  தெரிவித்துள்ளார்கள்.  புனித நீராடும் பொது மக்கள் எவ்வித இடையூறுமின்றி, பாதுகாப்பான முறையில்  புனித நீராடுவதற்கு உரிய பாதுகாப்பு அளித்து சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்று காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஆளினர்களுக்கு அறிவுறுத்தினார்கள்.   இக்கூட்டத்தில் டி.எஸ்.பிக்கள் தூத்துக்குடி ஊரகம் முத்தமிழ், திருச்செந்தூர் தீபு, ஸ்ரீவைகுண்டம் சகாயஜோஸ், பயிற்சி டி.எஸ்.பி ராஜேஸ், மாவட்ட தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர்  ஜெயப்பிரகாஷ், மீன் வளத்துறை உதவி இயக்குனர் பாலசரஸ்வதி, இன்ஸ்பெக்டர்கள்;; முறப்பநாடு விஜயகுமார், செய்துங்கநல்லூர் சோமன்ராஜன்,  ஸ்ரீவைகுண்டம் வெங்கடேஷ், ஆத்தூர்  விஜயகுமார், ஏரல் பட்டாணி,  ஆழ்வார்திருநகரி பத்மகுமார் , எஸ்.ஐக்கள் . முத்து, பாலகிருஷ்ணன் மற்றும் தூத்துக்குடி தீயணைப்பு நிலைய அதிகாரி சந்திரசேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo