Onetamil News Logo

ஸ்டோர் போன்ற தனியார் நிறுவனங்கள், சிறிய, பெரிய தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், தங்கும் விடுதிகள், உணவகங்கள், மற்றும் மருந்து கடைகளில் வழங்கப்படும் ரசீதுகளை தமிழில் வழங்க மதிமுக கோரிக்கை

Onetamil News
 

ஸ்டோர் போன்ற தனியார் நிறுவனங்கள், சிறிய, பெரிய தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், தங்கும் விடுதிகள், உணவகங்கள், மற்றும் மருந்து கடைகளில் வழங்கப்படும் ரசீதுகளை தமிழில் வழங்க மதிமுக கோரிக்கை


தூத்துக்குடி 2020 பிப்.17: ஸ்டோர் போன்ற தனியார் நிறுவனங்கள், சிறிய, பெரிய தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், தங்கும் விடுதிகள், உணவகங்கள், மற்றும் மருந்து கடைகளில் வழங்கப்படும் ரசீதுகளை தமிழில் வழங்க மதிமுக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மதிமுக மாநகர செயலாளர் பூபதி கலெக்டர் க்கு மக்கள் குறை தீர்க்கும் முகாமில் வழங்கிய மனுவில் கூறியதாவது....1.அரசின் உத்தரவுகள் அரசாணைகள்; வழிகாட்டு நெறிமுறைகள் சுற்றறிக்கைகள் தமிழிலேயே வெளியிட வேண்டி.
2.அரசு அலுவலகங்களில் அலுவலர்கள் தமிழிலேயே கையெழுத்திட வேண்டி.
3.அரசு வாகனங்களில் துறைகளின் பெயர்கள் மற்றும் அலுவலர் பதவி பெயரினை தமிழிலேயே எழுதிட வேண்டி.
4.தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் உணவகங்களில் தமிழில் பெயர் பலகைகள் வைத்திட உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டி.
5. வணிக நிறுவனங்கள் மற்றும் உணவகங்களில் வழங்கப்படும் ரசீதுகளை தமிழில் வழங்கிட உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டி கோரிக்கை விடுத்துள்ளனர்.
உலக தாய்மொழி தினத்தில் அமுதமான தமிழை போற்றி வளர்ப்போம். தமிழக அரசும் தமிழ் வளர்ச்சித்துறையும் தமிழை வளர்ப்பதிலும் பாதுகாப்பதிலும் கூடுதல் கவனம் செலுத்தி தமிழை வளர்க்கவும் அதன் சிறப்புக்களையும் தொன்மையையும் பாதுகாக்கும் வகையில் ஆட்சிமொழிச் சட்டத்தின்படி அரசு அலுவலகங்களில் பேணப்படும் பதிவேடுகள், கோப்புகள் அனைத்தும் தமிழிலேயே எழுதப்படுதல் வேண்டும். அரசு அலுவலகங்களில் இருந்து அனுப்பப்படும் கடிதங்கள் தமிழிலேயே எழுதப்படுதல் வேண்டும். அரசுத் துறை அலுவலகங்களில் இருந்து வெளியிடப்படும் ஆணைகள் உத்தரவுகள் மற்றும் அறிக்கைகள் தமிழிலேயே அமைதல் வேண்டும். ஆனால் தற்பொழுது அனைத்து அரசு அலுவலகங்களிலும் பேணப்படும் பதிவேடுகள், கோப்புகள் ஆங்கிலத்தில் பேணப்பட்டு வருகின்றன. அரசு அலுவலகங்களில் இருந்து அனுப்பப்படும் கடிதங்கள் ஆங்கிலத்தில் காணப்படுகின்றன. அனைத்து அரசு அலுவலகங்களிலும்  இருந்து வெளியிடப்படும் ஆணைகள் உத்தரவுகள் மற்றும் அறிக்கைகள் ஆங்கிலத்தில் காணப்படுகின்றன. இச்செயல் ஆட்சிமொழிச் சட்டத்தையும், தமிழ் மொழியையும் அவமதிக்கும் விதமாக உள்ளது. 
  ஆகவே தாங்கள் ஆட்சிமொழிச் சட்டத்தின்படி தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து அரசு அலுவலகங்களில் பேணப்படும் பதிவேடுகள், கோப்புகள் அனைத்தும் தமிழிலேயே எழுதிடவும். அரசு அலுவலகங்களில் இருந்து அனுப்பப்படும் கடிதங்கள் தமிழிலேயே எழுதிடவும், அரசுத் துறை அலுவலகங்களில் இருந்து வெளியிடப்படும் ஆணைகள் உத்தரவுகள் மற்றும் அறிக்கைகள் தமிழிலேயே அமைந்திட நடவடிக்கை எடுத்திட தங்களை பணிவுடன்; கேட்டுக்கொள்கிறேன்.                
ஆட்சிமொழிச் சட்டத்தின்படி தமிழ்நாட்டின் ஆட்சி மொழி தமிழ் மொழி மட்டுமே. தமிழ் நாடு அரசின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் பணிபுரியும் அனைத்து அரசுப் பணியாளர்களும் அனைத்து இனங்களிலும் 21.06.1978 முதல் தமிழில் மட்டுமே கையொப்பமிட வேண்டுமென்று ஆணையிடப்பட்டுள்ளது. ஆனால் தற்பொழுது அனைத்து அரசு அலுவலர்களும் ஆங்கிலத்தில் கையொப்பமிட்டு வருகின்றனர். இச்செயல் அரசையும் ஆட்சிமொழிச் சட்டத்தையும், தமிழ் மொழியையும் அவமதிக்கும் விதமாக உள்ளது. ஆகவே தாங்கள் ஆட்சிமொழிச் சட்டத்தின்படி தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து அரசுத் துறைகளிலும் உள்ள அலுவலர்கள் தமிழில் கையொப்பமிட தாங்கள் நடவடிக்கை எடுத்திட தங்களை பணிவுடன்; கேட்டுக்கொள்கிறேன்.
தமிழக அரசு துறைகள் மற்றும் அரசு சார்ந்த போக்குவரத்து துறை, மின்சாரவாரியத்துறை மற்றும் பல துறைகளில் உள்ள வாகனங்களில் ‘தமிழ்நாடு அரசு’ என்றும், துறைகளின் பெயர் மற்றும் அலுவலரின்; பதவி பெயர்களை தமிழ் மொழியிலேயே எழுத வேண்டும் என அரசு, அரசு சார்ந்த துறைகளுக்கு சுற்றறிக்கை மூலம் தெரிவித்து, தமிழ்மொழிக்கு முன்னுரிமை கொடுத்து உதவும்படி தங்களை பணிவுடன்;; கேட்டுக்கொள்கிறேன். 
தமிழக அரசின் 1987 அரசாணையின் படி ஆட்சி (தமிழ்) மொழிக்கு முதலிடம் கொடுக்கும் வகையில் தமிழ் மொழியை முதலாவதாகவும் அதன்பின் 5:3:2 என்ற விகிதத்தில் பிற மொழிகளை பயன்படுத்த வேண்டும். தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், சிறிய, பெரிய தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், தங்கும் விடுதிகள், உணவகங்கள், மருந்து கடைகள், பன்னாட்டு நிறுவனங்கள் தங்களது பெயர் பலகைகளை தமிழில் வைத்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ள தங்களை பணிவுடன்;; கேட்டுக்கொள்கிறேன்.
தூத்துக்குடி அம்மா காய்கறிகடையில் தமிழில் ரசீதுகள் வழங்கப்படுவதுபோல் வேலவன் ஸ்டோர் போன்ற தனியார் நிறுவனங்கள், சிறிய, பெரிய தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், தங்கும் விடுதிகள், உணவகங்கள், மற்றும் மருந்து கடைகளில் வழங்கப்படும் ரசீதுகளை தமிழில் வழங்கவும் ரசீதில் குறிப்பிடப்படும் பொருளின் பெயரை தமிழில் குறிப்பிடவும் தாங்கள் உரிய நடவடிக்கை தஜில் கூறியுள்ளனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo