Onetamil News Logo

உப்பாத்து ஓடையை மீட்டு தந்த நாயகன் தாசில்தார் செல்வகுமார் -க்கு உப்பாத்து ஓடை மீட்பு குழு பாராட்டு 

Onetamil News
 

உப்பாத்து ஓடையை மீட்டு தந்த நாயகன் தாசில்தார் செல்வகுமார் -க்கு உப்பாத்து ஓடை மீட்பு குழு பாராட்டு   


தூத்துக்குடி 2020 ஜூலை 29 ;தூத்துக்குடி உப்பாத்து ஓடையில் பட்டா போட்ட இடத்தை மீட்டு தந்த நாயகன் தாசில்தார் செல்வகுமார் -க்கு உப்பாத்து ஓடை மீட்பு குழு பாராட்டி வருகிறது. 
தூத்துக்குடியிலுள்ள உப்பாத்து ஓடை தனியார் நிறுவன ஆக்கிரமிப்பில் உள்ளதாகவும் அதை மீட்டு தர வேண்டுமென  முள்ளக்காடு, முத்தையாபுரம், அத்திமரப்பட்டி விவசாய சங்க தலைவர் அழகுராஜா, பொருளாளர் சின்னக்குட்டி, 25 கிராம உப்பாத்து ஓடை விவசாய குழு ஒருங்கிணைப்பாளர் ஜோதிமணி, ஜேஎஸ் நகர் சங்க நிர்வாகி முத்துகிருஷ்ணன், ராஜேந்திரன்,பெரியசாமி உட்பட பலர் மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தி வந்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோரம்பள்ளம் பெட்டைக்குளம் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இது தாமிரபரணி நீர் பாசனத்தின் கடைசி குளம். மேலும் மணிமுத்தாறு, கொல்லம்பரும்பு, மணியாச்சி, தட்டப்பாறை, பகுதிகளில் பெய்யும் மழைநீரும் இந்த குளத்தில் வந்து சேரும். இந்த குளம் மூலம் 5 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் பயனடைந்து வருகிறது. சுற்று வட்டார கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாக உள்ளது. மற்றும் மழை காலங்களில் மிகுதியான வெள்ள நீரை அங்குள்ள 24 கண்மாய் மூலம் உப்பாத்து ஓடை வழியே கடலுக்கு திறந்து விடுவது வழக்கம்.
உப்பாத்து ஓடை 7 கிமீ நீளம், 330 மீட்டர் அகலம் உள்ளது. இதில் 330 மீட்டர் அகலம் கொண்ட ஓடையை தனியார் வி.வி.நிறுவனம் ஆக்கிரமிப்பு செய்து 160 மீட்டராக சுருக்கியுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர். அது போல் வேறு சில தனியார் நிறுவனங்களும் ஓடையை ஆக்கிரமித்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 2015ம் ஆண்டு பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளமானது ஓடை ஆக்கிரமிக்கப்பட்டதால் மேற்கொண்டு செல்ல முடியாமல் அத்திமரப்பட்டி, முத்தையாபுரம், முள்ளக்காடு உட்பட 25க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. மேலும் தூத்துக்குடி நகரமே வெள்ளத்தில் மூழ்கியது குறிப்பிடத்தக்கது. விவசாய பயிர்கள் நீரில் மூழ்கி அழிந்தது. இது 2015ம் ஆண்டு நடந்த சம்பவம்.
இதனால் இந்த ஆக்கிரமிப்பினை அகற்றி முள்ளக்காடு, முத்தையாபுரம், அத்திமரப்பட்டி விவசாய சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்திப்நந்தூரி உத்தரவின் பேரில், உதவி சார் ஆட்சியர் (பயிற்சி) பிரித்வி ராஜ்,தாசில்தார் செல்வகுமார் ஆகியோர் உப்பாத்து ஓடையில் ஆய்வு நடத்தினார். பின்னர் விவசாய சங்க பிரதிநிதிகள் அவரை சந்தித்து ஆக்கிரமிப்பில் உள்ள பகுதிகளை காண்பித்து அதை மீட்க வலியுறுத்தினர்.
 இந்த நிலையில் தூத்துக்குடி தாசில்தார் செல்வகுமார் சம்பவ இடத்திற்கு சென்று இடத்தை அளந்து,ஆற்றின் அளவையும் அளந்து, உப்பாத்து ஓடையை ஆக்கிரமித்த தனியார் இடத்தை மீட்டு விவசாயம் செழிக்க உறுதுணையாக இருந்தார்.அதனால் உப்பாத்து ஓடையில் பட்டா போட்ட இடத்தை மீட்டு தந்த நாயகன் தாசில்தார் செல்வகுமாரை உப்பாத்து ஓடை மீட்பு குழு பாராட்டி வருகிறது.        
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo