Onetamil News Logo

பேரூரணி மாவட்ட சிறையில் உள்ள 170 சிறைவாசிகளுக்கு சட்ட அறிவு மற்றும்  சட்ட விழிப்புணர்வு முகாம்

Onetamil News
 

பேரூரணி மாவட்ட சிறையில் உள்ள 170 சிறைவாசிகளுக்கு சட்ட அறிவு மற்றும் 
சட்ட விழிப்புணர்வு முகாம் 


தூத்துக்குடி பிப் 12 ;பேரூரணி மாவட்ட சிறையில் உள்ள 170 சிறைவாசிகளுக்கு சட்ட அறிவு மற்றும் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
                                                                                                                              தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மூலம் இன்று பேரூரணி மாவட்ட சிறையில் சிறைவாசிகளுக்கு சட்ட அறிவு மற்றும் சட்ட விழிப்புணர்வு முகாமானது மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் சார்பு நீதிபதி  சு.சாமுவேல் பெஞ்சமின்  தலைமையில் நடைபெற்றது. மேற்படி முகாமில் மாவட்ட சிறை கண்காணிப்பாளர் (பொறுப்பு)  அர்சுணன் வரவேற்புரை நிகழ்த்தினார். மேற்படி முகாமில் 170 சிறைவாசிகள் கலந்துகொண்டனர். மேற்படி முகாமில் சிறைவாசிகளுக்கான உரிமைகள் மற்றும் கடமைகள்  குறித்தும், கைதிகளுக்கு சட்ட உதவி மையம் மூலம் கிடைக்ககூடிய உதவிகள் குறித்தும், சிறைவாசிகளை ஜாமீனில் எடுப்பதற்கும் அவர்களது வழக்கை நடத்துவதற்கும, சட்ட பணிகள் ஆணைக்குழ மூலமாக அரசு செலவில் வழக்கறிஞரை நியமனம் செய்வதும் குறித்தும் விளக்கி கூறப்பட்டது. மேற்படி முகாமில் சிறைவாசிகள் தங்களுக்குரிய சந்தேகங்களை கேட்டு அதற்குரிய பதில்களை தெரிந்துகொண்டனர்.   இறுதியில் சட்ட தன்னார்வ தொண்டர் பால் செல்வம் நன்றியுரை கூறினார்.  
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo