Onetamil News Logo

தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் வரும் 15ம் தேதி(ஆனி முதல் நாள்) வருஷாபிஷேக விழா நடைபெறுகிறது

Onetamil News
 

தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் வரும் 15ம் தேதி(ஆனி முதல் நாள்) வருஷாபிஷேக விழா நடைபெறுகிறது


தூத்துக்குடி 2018 ஜூன் 12 ;தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் வரும் 15ம் தேதி(ஆனி முதல் நாள்) வருஷாபிஷேக விழா நடைபெறுகிறது. 
தூத்துக்குடி கோரம்பள்ளம் அய்யனடைப்பு ஸ்ரீசித்தர் நகரிலுள்ள ஸ்ரீசித்தர் பீடத்தில் மஹா பிரத்தியங்கிராதேவி-காலபைரவர், குருமகாலிங்கேஸ்வரர், மஹாசரஸ்வதி-மகாலெட்சுமி தேவி, வீரணார், முனீஸ்வரர் உள்ளிட்ட சுவாமிகள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். 
தென்தமிழகத்தில் மிகவும் ஆன்மிக சிறப்புபெற்றுள்ள இக்கோவிலில் வரும் 15ம் தேதி(வெள்ளிக்கிழமை) மஹா வருஷாபிஷேக விழா நடைபெறுகிறது. அன்று காலை 6மணிக்கு விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமத்துடன் வருஷாபிஷேக விழா துவங்குகிறது. காலை 7மணிக்கு, நவக்கிரக ஹோமம், சுதர்சன ஹோமம், மஹா பூர்ணாகுதியும், காலை 9மணிக்கு லெட்சுமிபூஜை, கோ பூஜை, கன்னிகா பூஜையும் நடக்கிறது.
தொடர்ந்து மதியம் 12.30மணிக்கு மேல் 1.30மணிக்குள் மஹாபிரத்தியங்கிராதேவி-காலபைரவர், மஹாசரஸ்வதி-மகாலெட்சுமிதேவி, குருமகாலிங்கேஸ்வரர் உள்ளிட்ட பரிவாரதேவதா சமேத தெய்வங்கள் மற்றும் மூலஸ்தான வருஷாபிஷேக விழா கோலாகலமாக நடைபெறுகிறது.
சிங்கப்பூர் தொழில்அதிபர் தயாளன், சசிதாஸ்ரீ, மோனிஷ், டெவினா குடும்பத்தினர் தலைமையில், வருஷாபிஷேகத்தினை ஸ்ரீசித்தர் பீடத்தின் சுவாமிகள் சாக்தஸ்ரீ சற்குரு சீனிவாச சித்தர் நடத்துகிறார். 
வருஷாபிஷேகத்தினைத்தொடர்ந்து, பிரத்தியங்கிராதேவி-காலபைரவர், மஹாசரஸ்வதி-லெட்சுமிதேவி, குருமகாலிங்கேஸ்வரர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பால், தயிர், பன்னீர், மஞ்சள் உள்ளிட்ட 16வகையான அபிஷேகம், அலங்காரத்துடன் தீபாரதனை நடைபெறுகிறது. அதனைத்தொடர்ந்து மதியம் 2மணிக்கு பக்தர்களுக்கு மஹா அன்னதானம் வழங்கப்படுகிறது. 
விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீபிரத்தியங்கிராதேவி-காலபைரவர் சித்தர் பீடத்தின் சுவாமிகள் சாக்தஸ்ரீ சற்குரு சீனிவாசசித்தர் தலைமையில் சித்தர்பீடத்தினர், மகளிர்அணியினர் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo