1997ம் ஆண்டு அல் உம்மா தீவிரவாதிகளால் கொலை செய்யப்பட்ட காவலர் செல்வராஜ் மகளுக்கு 22 ஆண்டுகளுக்குப்பிறகு அரசு வேலை
கோவை 2019 நவம்பர் 12 ;1997ம் ஆண்டு அல் உம்மா தீவிரவாதிகளால் கொலை செய்யப்பட்ட காவலர் செல்வராஜ் மகளுக்கு கோவை வடக்கு தாசில்தார் அலுவலகத்தில் இளநிலை உதவியாளர் வேலை வழங்கப்பட்டது. காவலர் செல்வராஜ் மறைவின் போது 10 மாத குழந்தை, தற்போது 21 வயது அவருக்குத்தான் அரசுப்பணி வழங்கப்பட்டது.
கோயம்புத்தூர் உக்கடம் காவல் நிலையத்தைச் சேர்ந்த செல்வராஜ் கடந்த 1997ம் ஆண்டு நவம்பர் மாதம் 29ம் தேதி பணியில்ஈடுபட்டிருந்தார். அப்போது 3 பேர் ஒரே மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்களைத் தடுத்து நிறுத்திய செல்வராஜ் அபராதம்விதித்தார். இதையடுத்து அவருக்கும் மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.இதையடுத்து அங்கிருந்து சென்ற அந்த 3 வாலிபர்களும் பெரும் கூட்டத்தைக் கூட்டிக் கொண்டு வந்தனர். காவலர் செல்வராஜை நடுரோட்டிலேயே வைத்து கண்டந்துண்டமாக வெட்டிக் கொன்றனர்.1997 ஆம் ஆண்டு தமிழக வரலாற்றில் கோவை மாநகரத்த்தில் நடந்த கலவரம் ஒரு கருப்புப் பக்கம் என்றே சொல்ல வேண்டும். ஏறக்குறைய சுமார் 14 இஸ்லாமியர்கள் கொல்லப்பட்ட இந்த கலவரத்திற்கு முந்தைய நாள் செல்வராஜ் என்ற காவலர் கொல்லப்பட்டார். 22 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது செல்வராஜின் மகளுக்கு அரசு வேலை வழங்கப்பட்டுள்ளது.1997 ஆம் நவம்பர் மாதம் கோவை உக்கடத்தில் இஸ்லாமியர்களுக்கும் அருந்ததிய இந்துக்களுக்கும் இடையில் கலவரம் ஏற்பட்டது. கொலை செய்யப்பட்டார் செல்வராஜ். இறக்கும்போது இவரது மகள் ஒரு 10 மாதக் குழந்தை.,தற்போது 22 வயதாகும் அவரது மகள் லாவண்யாவுக்கு அரசு வேலை வாங்கித்தர காவல்துறை பெரும் முயற்சி எடுத்து வந்தது. அதன் விளைவாகத் தற்போது கோவை வடக்கு மாவட்ட தாலுகா அலுவலகத்தில் இளநிலை உதவியாளர் பணி வழங்கப்பட்டுள்ளது.
இதையடுத்து ஏற்பட்ட வன்முறை மதக் கலவரமாக மாறியது. பஸ்கள் எரிக்கப்பட்டன, கடைகளும் வீடுகளும்சூறையாடப்பட்டன. இந்த வன்முறையை அடக்க போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 17 பேர் கொல்லப்பட்டனர்.
இதற்கான பணி நியமன ஆணையை மாவட்ட ஆட்சியர் ராசாமணி இன்று வழங்கினார். கடந்த திங்கள் கிழமையன்று பணியில் சேர்ந்து தன் அரசுப்பணியைத் தொடங்கிவிட்டார் லாவண்யா. இதனையடுத்து, தன் தயாருடன் கோவை மாநகர காவல்துறை ஆணையர் சுமித் சரணை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.அவருடன் காவல்துறை அதிகாரி தூத்துக்குடி செல்வம் ஐ.பி.எஸ்