Onetamil News Logo

முன் விரோதம் காரணமாக கம்பால் தாக்கி தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்தவர் கைது 

Onetamil News
 

முன் விரோதம் காரணமாக கம்பால் தாக்கி தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்தவர் கைது 


தூத்துக்குடி 2021 அக்டோபர் 13 ;தூத்துக்குடி மாவட்டம்,எப்போதும்வென்றான் காவல்நிலையம்,முன் விரோதம் காரணமாக கம்பால் தாக்கி தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டார்.
எப்போதும்வென்றான் ஆதனூர் பகுதியைச் சேர்ந்தவர் முத்து மகன் இருளப்பசாமி (37) என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஆதிலிங்கம் மகன் உத்தண்டு ராம்குமார் (எ) பன்னி குமார் (23) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று (12.10.2021)  இருளப்பசாமி தனது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த உத்தண்டு ராம்குமார் (எ) பன்னி குமார் இருளப்பசாமியிடம் தகராறு செய்து கம்பால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுகுறித்து இருளப்பசாமி அளித்த புகாரின் பேரில் எப்போதும்வென்றான் காவல்நிலைய உதவி ஆய்வாளர் திரு. செந்தில்வேல் முருகன் வழக்குப்பதிவு செய்து உத்தண்டு ராம்குமார் (எ) பன்னி குமாரை கைது செய்தார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo