Onetamil News Logo

திருச்செந்தூரில் டாக்டர்.பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபத்தினை  தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்து நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா 

Onetamil News
 

திருச்செந்தூரில் டாக்டர்.பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபத்தினை  தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்து நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா 


தூத்துக்குடி 2020 பிப்ரவரி 19 ;தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் டாக்டர்.பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபத்தினை  தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்து நலத்திட்ட உதவிகள் வழங்;கும் விழாவுக்கு பந்தல் அமைக்கும் பணிகளை  செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ  நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். 
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் டாக்டர்.பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபத்தினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்து நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவுக்கு வரும் பந்தல் அமைக்கும் பணிகளை  செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, திருவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.சண்முகநாதன் அவர்கள் உடனிருந்தார். 
பின்னர், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-
 தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வருகிற 22ம் தேதி திருச்செந்தூரில் செய்தி மக்கள் துறையின் சார்பில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் அவர்கள் முழு உருவ வெண்கல சிலையுடன் கூடிய மணிமண்டபத்தினை நேரில் வந்து திறந்து வைத்து சிறப்பிக்க உள்ளார்கள். இவ்விழாவில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் தலைமையுரையாற்ற உள்ளார்கள். மேலும் இவ்விழாவில் அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளார்கள். மேலும் தமிழ்நாடு முதலமைச்சர் பல்வேறு துறையின் சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும், முடிவுற்ற திட்ட பணிகளையும் துவக்கி வைத்து, புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி முப்பெரும் விழாவாக நடைபெற உள்ளது.

இந்த விழா தூத்துக்குடி மாவட்டத்தில் வரலாற்றில் ஒரு மைல்கல் என்று சொன்னால் மிகையாகாது. அந்த அளவுக்கு பொதுமக்கள், நிர்வாகிகள் கலந்துகொள்ள உள்ளார்கள். மேலும் இவ்விழாவில் பல்வேறு புதிய அறிவிப்புகளை இந்த மாவட்ட மக்கள் நீண்ட காலமாக எதிர்பார்க்கின்ற அறிவிப்புகளை அறிவிக்கின்ற விழாவாக அமைய உள்ளது.தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வருகையை முன்னிட்டு இன்று பந்தல் அமைக்கும் பணிகளை நேரில் ஆய்வு செய்து பணிகளை விரைவில் முடித்திடவும், அலுவலர்கள் ஒருங்கிணைந்து செயல்படவும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது என செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார். 
அதனைத்தொடர்ந்து திருச்செந்தூர் அரசு பொதுப்பணித்துறை விருந்தினர் மாளிகையில்  செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் அலுவலர்களுடன், விழாவில் குடிநீர் வசதி, தற்காலிக கழிப்பறை வசதிகள், மருத்துவ முகாம் மற்றும் பாதுகாப்பு வசதிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார். 

இந்த ஆய்வின் போது, மாவட்ட அறங்காவலர் குழுத் தலைவர் மோகன், மாவட்ட மத்திய  கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், திருச்செந்தூர் கோட்டாட்சியர் செல்வி.தனபிரியா, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ஜெயராமன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) உமாசங்கர், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) குற்றாலிங்கம், உதவி செயற்பொறியாளர்கள் ராமலிங்கம், வெள்ளசாமிராஜ் மற்றும் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் முன்னாள் தக்கார் ப.தா.கோட்டைமணிகண்டன், திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் ரெஜிபர்ட் பர்னாண்டோ, முக்கிய பிரமுகர்கள் ஆறுமுகநயினார், மு.ராமச்சந்திரன், மகேந்திரன், சுரேஷ்பாபு மற்றும் அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo