Onetamil News Logo

சேர்வைகாரன் மடம் பகுதியில் தொடர்ந்து 30  மணி நேரத்திற்கு மேலாக மின் தடை ;பொது மக்கள் அச்சம் 

Onetamil News
 

சேர்வைகாரன் மடம் பகுதியில் தொடர்ந்து 30  மணி நேரத்திற்கு மேலாக மின் தடை ;பொது மக்கள் அச்சம் 


தூத்துக்குடி  2019 ஜூலை 20 ;தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகே உள்ள சேர்வைகாரன் மடம் பகுதியில் தொடர்ந்து 30  மணி நேரத்திற்கு மேலாக மின் தடை செய்யப்பட்டதால் அங்குள்ள கிராம மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். ஆமை வேகத்தில் நடைபெறும் பணிகளால் மின் இணைப்பு கொடுக்க மேலும் தாமதமாகலாம் என்று பொது மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று காலை அடித்த சூறை காற்றில் சாயர்புரம் அருகே உள்ள பேய்குளத்தில் இரண்டு மின் கம்பங்கள் முறிந்து விழுந்தன. இதையடுத்து சேர்வைகாரன்மடம், தங்கம்மாள் புரம், சிவஞானபுரம், சக்கம்மாள்புரம் ஆகிய நான்கு ஊர்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால் மின்சாரம் இன்றி பொது மக்கள் அவதியடைந்தனர். அன்று மாலைக்குள் மின் இணைப்பு வழங்க மின் வாரிய அலுவலர்கள் தேவை யான நடவடிக்கைகள் எடுப்பார்கள் என்று எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. மின் வாரிய அலுவலர்களின் ஆமை வேக செயல்பாட்டினால் தற்போது வரை மின் இணைப்பு வழங்க படவில்லை. விரைந்து செயல்பட்டு உடனடியாக மின் வழங்காவிட்டால் மின் வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போவதாக தெரிவித்துள்ளனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo