Onetamil News Logo

வார,மாத தவணை கேட்டு மிரட்டும் நிதி நிறுவனங்கள் ; மாப்பிள்ளையூரணி அருகே உள்ள புதிய முனியசாமிபுரம் பகுதி மகளிர் குழுவினர்  கலெக்டர்-யிடம் கோரிக்கை

Onetamil News
 

வார,மாத தவணை கேட்டு மிரட்டும் நிதி நிறுவனங்கள் ; மாப்பிள்ளையூரணி அருகே உள்ள புதிய முனியசாமிபுரம் பகுதி மகளிர் குழுவினர்  கலெக்டர்-யிடம் கோரிக்கை


தூத்துக்குடி 2020 மே 28 ;தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று கலெக்டர் க்கு அனுப்பும் பெட்டியில் மாப்பிள்ளையூரணி அருகே உள்ள புதிய முனியசாமிபுரம் பகுதி மகளிர் குழுவினர்  கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
நாங்கள் கூலித்தொழில் செய்தும் மகளிர் கடன் பெற்றும் குடும்பத்தை நடத்தி வருகிறோம். கடந்த 2 மாதங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் தொழில் இல்லாமல் சிரமப்பட்டோம். இதனால் தொழில் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்து உள்ளோம். இதற்கிடையில்  தனியார் நிதி நிறுவனங்களிடம் கடன் உதவி பெற்று 10 ஆயிரம் கடன் பெற்று, அதற்கு வார வட்டி,மாத வட்டி  போன்றவற்றை செலுத்தி வருகிறோம். கடந்த 2 மாதமாக தொழில் இல்லாததால் கடனை செலுத்த முடியவில்லை. 2 மாதங்களுக்கு சேர்த்து  உடனடியாக வட்டியை கட்ட மிரட்டுகின்றனர்.
 குடும்ப செலவு, வீட்டு வாடகை, தவணை தொகை மற்றும் குழந்தைகளுக்கான செலவு ஆகியவற்றை செய்ய சிரமப்படுகிறார்கள் . தற்போது இருக்கும் சூழ்நிலையில் தொழில் இல்லாததால் எந்த தவணை தொகையும் செலுத்த இயலாத நிலையில் உள்ளோம்.
2மாத கடன் தவணை தொகையை 2 மாதங்கள் கழித்து பணம் கட்டிட நிதி நிறுவனங்களும் உதவி செய்ய வேண்டும்.அதற்கு கலெக்டர் அவர்கள் உத்தரவிடவேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo