Onetamil News Logo

தூத்துக்குடியில் தொகுப்பு ஊதிய அடிப்படையில் பணியாற்றிட செவிலியர்கள், ஆய்வக தொழில்நுட்ப பணியாளர்கள், பல் நோக்க மருத்துவமனை பணியாளர்கள் ஆகிய  பதவிகளுக்கு நேர்முக தேர்வு 

Onetamil News
 

தூத்துக்குடியில் தொகுப்பு ஊதிய அடிப்படையில் பணியாற்றிட செவிலியர்கள், ஆய்வக தொழில்நுட்ப பணியாளர்கள், பல் நோக்க மருத்துவமனை பணியாளர்கள் ஆகிய  பதவிகளுக்கு நேர்முக தேர்வு     


 தூத்துக்குடி 2020 ஜூலை 10 ;தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தொற்று நோய் தடுப்பு பணிகளில் தற்காலிகமாக தொகுப்பு ஊதிய அடிப்படையில் பணியாற்றிட செவிலியர்கள், ஆய்வக தொழில்நுட்ப பணியாளர்கள், பல் நோக்க மருத்துவமனை பணியாளர்கள் ஆகிய  பதவிகளுக்கு நேர்முக தேர்வு நடைபெற உள்ளது. விருப்பமுள்ளவர்கள் கலந்துகொள்ளலாம் - மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, தகவல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவரது அறிவிப்பு  ;தமிழக அரசின் உத்தரவுப்படி தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தொற்று நோய் தடுப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் கொரோனா தொற்று நோய் பரவலை கட்டுபடுத்தும் வகையில் சுகாதார பணிகளில் தற்காலிகமாக ஈடுபடுத்திட தொகுப்பு ஊதிய அடிப்படையில் தகுதி வாய்ந்த நபர்களை நியமிக்கப்பட உள்ளது. அதனடிப்படையில் கீழ்கண்ட பணிகளுக்கு நேர்முக தேர்வு நடைபெற உள்ளது. 
வரிசை எண் பணியின் பெயர் தகுதிகள்
1 செவிலியர்கள் ; (Staff Nurses) பிஎஸ்சி நர்சிங் அல்லது டிப்ளமோ நர்சிங் (3 ஆண்டு தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்) 
2 ஆய்வக தொழில்நுட்ப பணியாளர் (Lab Technician)  மருத்துவ ஆய்வக  தொழில்நுட்ப 
சான்றிதழ் (தமிழ்நாடு மெடிக்கல் எஜூகேஷனால் அங்கிகரிக்கப்பட்ட ஒரு ஆண்டு படிப்பில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்) 
3.பல் நோக்க மருத்துவமனை பணியாளர் (Multi Purpose Hospital Worker)எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்
 
தூத்துக்குடி மாவட்டத்தில்; தற்காலிகமாக தொகுப்பு ஊதிய அடிப்படையில் கொரோனா தொற்று தடுப்பு பணிகளில் மேற்கண்ட பதவிகளுக்கு தகுதியுள்ள பணியாற்றிட விருப்பமுள்ளவர்கள் அனைத்து கல்வி சான்றிதழ்கள், ஆதார் கார்டு, குடும்ப அட்டை, பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம் 2 உள்ளிட்ட ஆவணங்களுடன் செவிலியர்கள், ஆய்வக தொழில்நுட்ப பணியாளர் பதவிகளுக்கு 15.7.2020 (புதன்கிழமை) காலை 10 மணிக்கும், பல் நோக்க மருத்துவமனை பணியாளர் பதவிக்கு 16.7.2020 (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கும் உதவி ஆணையர் (தொழிலாளர் நலத்துறை), கோரம்பள்ளம், தூத்துக்குடி அலுவலகத்தில் நடைபெறும் நேர்முகத் தேர்விற்கு நேரில் வருகை தருமாறு  கேட்டுக்கொள்ளப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, தெரிவித்துள்ளார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo