Onetamil News Logo

ஆதனூர் கிராமத்தில் மக்களின் சொந்த பங்களிப்புடன் எப்போதும்வென்றான் அணையில் ரூ.20 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட தடுப்பணை ;அமைச்சர் பேச்சு 

Onetamil News
 

ஆதனூர் கிராமத்தில் மக்களின் சொந்த பங்களிப்புடன் எப்போதும்வென்றான் அணையில் ரூ.20 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட தடுப்பணை ;அமைச்சர் பேச்சு 


கோவில்பட்டி 2019 நவம்பர் 30 ;தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறை கட்டிடத்தினை  செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ திறந்து வைத்தார். மேலும்,  பிரதம மந்திரியின் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான ஓய்வூதிய திட்ட அடையாள அட்டையினை 5 நபர்களுக்கு வழங்கினார். 
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறை கட்டிடம் திறப்பு விழா மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி,  தலைமையில் இன்று (30.11.2019) நடைபெற்றது. இவ்விழாவில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ கலந்துகொண்டு கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறை கட்டிடத்தினை திறந்து வைத்தார். மேலும், பிரதம மந்திரியின் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான ஓய்வூதிய திட்ட அடையாள அட்டையினை 5 பயனாளிகளுக்கு வழங்கினார். இவ்விழாவிற்கு விளாத்திக்குளம் சட்டமன்ற உறுப்பினர் போ.சின்னப்பன் , மாவட்ட அறங்காவலர் குழுத்தலைவர் மோகன் ஆகியோர் முன்னிலை  வகித்தனர்.  
இவ்விழாவில்,செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ  பேசியதாவது:-
  அம்மா  தமிழக மக்களுக்கு குறிப்பாக பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அதிக அளவிலான திட்டங்களை செயல்படுத்தி திட்டங்களால் நம்மிடையே வாழ்ந்து வருகிறார்கள். கோவில்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆண்டுதோறும் எனது சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து பல்வேறு கூடுதல் கட்டிடங்கள் மற்றும் அடிப்படை வசதிகள் கட்டித்தரப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டப்பட்டு இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதற்கெல்லாம் அடிப்படை காரணம்  புரட்சித்தலைவி அம்மா  தான். சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியை ரூ.2 கோடியாக உயர்த்தி அதில் ரூ.25 லட்சம் கண்டிப்பாக பள்ளிகளின் அடிப்படை வசதியை மேம்படுத்த பயன்படுத்த வேண்டும் என உத்தரவிட்டார். அதனடிப்படையில் இன்று தமிழகத்தில் உள்ள பள்ளிகள் அனைத்திற்கும் கட்டிடங்கள் மற்றும் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டு தன்னிறைவு பெறும் நிலையில் உள்ளது.தமிழ்நாடு முதலமைச்சர்  இந்த ஆண்டு கல்வித்துறைக்கு ரூ.30,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்து திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்கள். அரசின் திட்டங்களால் உயர்கல்வி பயில்பவர்களின் எண்ணிக்கை 50 சதவிதம் அளவிற்கு உயர்ந்து தமிழகம் இந்தியாவில் முதல் இடம் பிடித்துள்ளது. அறிவியல் ஆய்வை வளர்க்கும் வகையில் கோவில்பட்டியில் ரூ.60 லட்சம் மதிப்பில் அறிவியல் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவ, மாணவிகள் இதனை பார்வையிட்டு தங்களது அறிவுத்திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும். 
 அம்மா  இந்தியாவிலேயே முன்னோடியாக மழைநீர் சேகரிப்பு திட்டத்தினை தமிழகத்தில் செயல்படுத்தினார்கள்.

தமிழ்நாடு முதலமைச்சர்  இத்திட்டத்தை மேலும் மேம்படுத்தி அனைத்து ஏரி, குளங்களையும் தூர்வாறிட குடிமராமத்து திட்டத்தை செயல்படுத்தினார்கள். தூத்துக்குடி மாவட்டம் எப்போதும்வென்றான் அருகில் உள்ள ஆதனூர் கிராம மக்கள் தமிழகத்திற்கே முன் மாதிரியாக எப்போதும்வென்றான் அணையில் இருந்து வழிந்து சென்று கடலில் கலக்கும் நீரினை ரூ.20 லட்சம் மதிப்பில் தடுப்பணை அமைத்து அங்கிருந்து டீசல் பம்ப் மற்றும் குழாய் அமைத்து அருகில் உள்ள 2, 3 குளங்களை நிறைக்கும் திட்டத்தினை மக்கள் பங்களிப்பிலேயே சிறப்பாக செய்து முடித்துள்ளார்கள். அதை நேரில் சென்று பார்த்தோம். ஆதனூர் கிராம மக்களை மிகவும் பாராட்டுகிறோம். மேலும், அவர்களை முதலமைச்சர் அவர்களை சந்திக்க அழைத்து சென்று பாராட்டு பெறவும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், இக்கிராம மக்களுக்கு விருது வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மேலக்கரந்தை கிராம பகுதியில் ரூ.280 கோடி மதிப்பீட்டில் காற்றாலை மின் உற்பத்தி இயந்திர உதிரிபாகம் தாயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கப்பட உள்ளது. மேலும், ரூ.18 கோடி மதிப்பீட்டில் கோவில்பட்டியில் செவிலியர் பயிற்சி கல்லூரி விரைவில் தொடங்கப்பட உள்ளது.
மேலும் பல்வேறு திட்டங்களால் அதிக வேலைவாய்ப்புகள் பெற்று இப்பகுதி மிகுந்த வளர்ச்சி பெறும் என செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர்  பேசினார்.
பின்னர் ஓய்வூதிய திட்ட வாரத்தையொட்டி பிரதம மந்திரியின் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான ஓய்வூதிய திட்டத்தின்கீழ் 5 பயனாளிகளுக்கு வழங்கினார். முன்னதாக தூத்துக்குடி மாவட்டம் எப்போதும்வென்றான் அருகில் உள்ள ஆதனூர் கிராமத்தில் மக்களின் சொந்த பங்களிப்புடன் எப்போதும்வென்றான் அணையில் ரூ.20 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட தடுப்பணை மற்றும் நீரேற்று நிலையத்தினை   செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் , மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினருடன் சென்று பார்வையிட்டார்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தனபதி, கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் விஜயா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகௌரி, கோவில்பட்டி நகராட்சி ஆணையர் ராஜாராம், முக்கிய பிரமுகர்கள் விஜயபாண்டியன், அய்யாத்துரைபாண்டியன், ராமச்சந்திரன், இ.பி.ரமேஷ், கணேஷ்பாண்டியன், வத்தல்ராஜ், கோவில்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உதவி தலைமை ஆசிரியை ரூத்ரத்னகுமாரி மற்றும் அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo