Onetamil News Logo

போலியாக பொறியாளர் சான்றிதழ் பெற்று பணியாற்றிய 6 பேர்களை பணி நீக்கம் செய்ய தூத்துக்குடி அனல் மின் நிலைய நிர்வாகம் நடவடிக்கை

Onetamil News
 

போலியாக பொறியாளர் சான்றிதழ் பெற்று பணியாற்றிய 6 பேர்களை பணி நீக்கம் செய்ய தூத்துக்குடி அனல் மின் நிலைய நிர்வாகம் நடவடிக்கை 


தூத்துக்குடி 2020 ஜூன் 2 ;போலியாக பொறியாளர் சான்றிதழ் பெற்று பணியாற்றிய 6 பேர்களை பணி நீக்கம் செய்ய தூத்துக்குடி அனல் மின் நிலைய நிர்வாகம் நடவடிக்கை எடுத்துவருகிறது.
தனியார் கல்வி நிலையங்களில் லட்சக்கணக்கில் பணம் கொடுத்து போலியாக உயர்கல்வி சான்று பெற்று தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் (TTPS) பொறியாளராக பணி புரிந்து வரும் எஸ்.சிவக்குமார், வி.துரை, ஏ.ராமகிருஷ்ணன், முத்துராசு, ஜி.குரூஸ் ஜோசப், கிருஷ்ணகுமார் ஆகிய  நபர்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு, அவர்களின் பதவி உயர்வுகளை இரத்து செய்து பணி நீக்கம் செய்திட வேண்டும் என சமூக ஆர்வலர் அக்ரி பரமசிவன் அனல்மின் நிலைய மேற்பார்வை பொறியாளருக்கு கடிதம் எழுதியிருந்தார்.
இந்நிலையில், அவரது கடிதத்திற்கு பதில் அளித்து அனல்மின் நிலைய மேற்பார்வை பொறியாளர் ஜோசஃபின் புளோரா எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது......
தமிழ்நாடு மின்சார வாரியம், தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் பணிபுரிந்து வரும் பொறியாளர்கள் முறைகேடான முறையில் கல்வி சான்றிதழ் மூலம் தகுதி பெற்று, வந்த பலர் தானும் பொறியாளர் என்று கூறிக்கொண்டு பணியாற்றி வருவதாகவும் அதனால் மின்வாரியத்திற்கு மிகுந்த நஷ்டம் ஏற்படுவதாக சில பொறியாளர்களின் பெயர் விபரம் தெரிவிக்கப்பட்டது.இதனால் முறையாக டிப்ளமோ மற்றும் பிஇ பயின்று பணியாற்றி வரும் பொறியாளர்களின் பதவி உயர்வு காலதாமதம் ஆவதாகவும் அரசுக்கும் மின்வாரியத்தில் இருந்து நிதி இழப்பு ஏற்படுவதாகவும், முறைகேடாக கல்வி சான்றிதழ் பெற்று உள்முகத் தேர்வில் தகுதி பெற்று பதவி உயர்வு பட்டியலில் இடம் பெறுவதை தடுப்பதோடு, பதவி உயர்வுகளை ரத்து செய்தும் ஊதியம் பிடித்தம் செய்து பணிநீக்கம் செய்திட அரசுக்கு வேண்டப்பட்டுள்ளது. இவ்வறு அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.                                                                                                               தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் (TTPS) ல் பணிபுரிந்து வரும் கீழ்கண்ட நபர்கள்,
1) S.Sivakumar AE/EN-1/TTPS 
2) V.Durai AE/EM-1/TTPS
3) A.Ramakrishnan AE/EM-1/TTPS
4) Muthurasu AE/M/AHP/TTPS
5) G.Cruzejoseph AE/M/O&E-1/TTPS
6) Krishnakumar AEE/M/O&E-1/TTPS
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் பொறியாளராக பணி புரிந்து வருபவர்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு அவர்களின் பதவி உயர்வுகளை ரத்து செய்து பணி நீக்கம் செய்திட வேண்டும்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo