Onetamil News Logo

தூத்துக்குடி அருகே கோர விபத்து லாரியும் காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் உறவினர் உள்ளிட்ட 4 பேர் பலி

Onetamil News
 

தூத்துக்குடி அருகே கோர விபத்து லாரியும் காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் உறவினர் உள்ளிட்ட 4 பேர் பலி


தூத்துக்குடி 2020 ஜனவரி 17 ;தூத்துக்குடி அருகே லாரியும் காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 4 பேர்  சம்பவ இடத்திலேயே பரிதாபமாகப் பலியானார்கள்.   
சென்னை அடையாறு சேர்ந்த சுபாஷ் சந்திரபோஸ் இவர் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் சகோதரர் சுபாஷ் சந்திரபோஸ் குடும்பத்துடன் இரண்டு காரில் 8பேர் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்துள்ளனர் 
இவர்கள் இன்று ராமேஸவரம் கோவிலில் சுவாமி தரிசனம் செய்து விட்டு  அங்கிருந்து காரில் திருச்செந்தூர் சென்று கொண்டிருந்தனர்  இன்று இரவு  இவர்கள்  வந்த கார் சிப்காட் புறவழிச்சாலையில் உள்ள குருகிய பாலத்தில்  வந்து கொண்டிருக்கையில் எதிரே வேகமாக  வந்த லாரி ஒன்று  கார் மீது திடீரென்று  வேகமாக  மோதியது இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது  இந்த விபத்தில் காரில் இருந்த பொள்ளாச்சி ஜெயராமன் உறவினர்கள் காரில் பயணித்த  ஆனந்த் மகள் ரம்யா (20),ரம்யா தோழி பவித்ரா(20),ஓட்டுநர் ஜோசன் (25),ஆனந்த் மகன் வீரேந்திரன் (15),ஆகிய 4 நபர்கள் காருக்குள்ளே  பரிதாபமாக பலியானார்கள். இந்த விபத்து நடந்த காருக்கு பின்னால் விரேந்திரன் தாத்தா சுபாஷ் சந்திர போஸ் காரில் வந்தனர் கார் விபத்து அடைந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர் 

தகவல் அறிந்த சிப்காட் போலீசார் விரைந்து வந்து காரில் இருந்து உடல்களை சுமார் இரண்டு மணி நேரம் போராடிமீட்டு பிரேத பரிசோதனைக்கா தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.விபத்து நடந்த  இடத்தை   மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அருண்பாலகோபால்  நேரில் பார்வையிட்டார் இந்த விபத்தில் தூத்துக்குடி புறவழிச்சாலையில் சுமார் மூன்று மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo