Onetamil News Logo

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர்கள் சங்க தூத்துக்குடி மாவட்ட பேரவை கூட்டம்

Onetamil News
 

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர்கள் சங்க தூத்துக்குடி மாவட்ட பேரவை கூட்டம்


கோவில்பட்டி  2019 நவம்பர் 12 ;கோவில்பட்டியில் நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்க பேரவை கூட்டம் இன்று நடந்தது.
கோவில்பட்டி காந்தி மண்டபத்தில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர்கள் சங்க தூத்துக்குடி மாவட்ட பேரவை கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்திற்கு தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்க மாவட்ட துணை தலைவர் பரணிதரன் தலைமை வகித்தார். கூட்டத்தை அரசு ஊழியர் சங்க வட்ட தலைவர் சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். சாலைப் பணியாளர் சங்க மாவட்ட செயலாளர் ஹரிபாலகிருஷ்ணன் வேலை அறிக்கையும், மாவட்ட பொருளாளர் திருமலை வரவு செலவு அறிக்கையும் வாசித்தனர்.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க வட்ட செயலாளர் உமாதேவி, வேளாண்மை அலுவலர் சங்க மாவட்ட பொருளாளர் பிரான்சிஸ், அரசு ஊழியர் சங்க வட்ட துணைத் தலைவர் சரவணன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். மாநிலச் செயலாளர் கோவிந்தன் நிறைவுரை ஆற்றினார். சாலை பணியாளர் சங்கத்தை சேர்ந்த பாண்டி நன்றி கூறினார். முன்னதாக சங்க கொடியேற்று விழா நடைபெற்றது. கூட்டத்தில் சாலைப் பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை பணி காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்கிட வேண்டும், உயிரிழந்த சாலைப் பணியாளர்களின் வாரிசுகளுக்கு விதிமுறைகளை தளர்த்தி வாரிசு பணி ஆணை வழங்க வேண்டும், சாலை பராமரிப்பு பணியை தனியாருக்கு ஒப்படைப்பதே கைவிட்டு அரசே ஏற்று நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தீர்மானங்களாக நிறை வேற்றப்பட்டது
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo