Onetamil News Logo

குவைத் நாட்டில் வேலைவாய்ப்புகள் விண்ணப்பிக்கலாம் -  மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி,  தகவல் 

Onetamil News
 

குவைத் நாட்டில் வேலைவாய்ப்புகள் விண்ணப்பிக்கலாம் -  மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி,  தகவல் 


தூத்துக்குடி 2020 ஜனவரி 28 ;குவைத் நாட்டில் இலகுரக வாகன ஓட்டுநர்கள், சமையலர்கள் மற்றும் வீட்டு வேலை பணிகளுக்கு விருப்பமுள்ள தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர்;கள் விண்ணப்பிக்கலாம் -  மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி,  தகவல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவரது அறிவிப்பு  ;
குவைத் நாட்டில் பணிபுரிய பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது ECNR Passport  உள்ள 25 வயது முதல் 45 வயதிற்குட்பட்ட அரபு நாட்டு ஓட்டுநர் உரிமம் பெற்ற இலகுரக ஓட்டுநர்கள் (Light Vehicle Driver) மற்றும் சமையலர்கள் - அரபு உணவு வகைகள் (Male House Cook)  பெருமளவில் தேவைப்படுகிறார்கள். 
ஓட்டுநருக்கு மாத ஊதியம் ரூ.25,000/- முதல் ரூ.32,000/- வரை, சமையலருக்கு மாத ஊதியம் ரூ.25,000/- முதல் ரூ.30,000/- வரை மற்றும் இருப்பிடம், விமானப் பயணச்சீட்டு, மருத்துவ சலுகை ஆகியவைகள் குவைத் நாட்டின் வேலையளிப்பவரால் வழங்கப்படும்.
மேலும் 31 வயது முதல் 45 வயதிற்குட்பட்ட வீட்டு வேலை செய்யும் பெண் பணியாளர்கள் (House Maid) தேவைப்படுகிறார்கள். மாத ஊதியம் ரூ.25,000/- முதல் ரூ.28,000/- வரை மற்றும் உணவு, இருப்பிடம், விமானப் பயணச்சீட்டு, மருத்துவச்சலுகை குவைத் நாட்டின் வேலையளிப்பவரால் வழங்கப்படும்.
மேலே தெரிவிக்கப்பட்ட பணிக்காலியிடத்திற்கான நேர்காணல் 03.02.2020 திங்கட்கிழமை காலை 9.00 மணிமுதல் மாலை 4.00 மணி வரை நடைபெற உள்ளது.
விருப்பமும் தகுதியும் உள்ள தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தங்களின் சுயவிவரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன் கல்வித் தகுதி, அனுபவ சான்றிதழ், புகைப்படம், செல்லத்தக்க பாஸ்போர்ட், அசல் மற்றும் நகல்கள் ஆகியவற்றுடன் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம், எண். 42, ஆலந்தூர் சாலை, திரு.வி.க. தொழிற்பேட்டை, கிண்டி, சென்னை-600 032 அலுவலகத்திற்கு 03.02.2020 திங்கட்கிழமை காலை 9.00 மணிக்கு நேரடியாக வருகை புரியுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் ஊதியம் மற்றும் பணி விவரங்களை அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன வலைதளம் மூலமாகவும்  www.omcmanpower.com மற்றும் 044-22505886 / 22502267/ 9566239685 என்ற தொலைபேசி எண்களின் மூலமாகவும் அறிந்துகொள்ளலாம்.
இந்திய அரசின் வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கான விவகார அமைச்சகத்தால் வழங்கப்பட்ட அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின்  முகவர் எண்.Rc.No.B-0821/ CHENNAI/CORPN/1000+/5/308/84  ஆகும். இந்த தகவலை மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, தெரிவித்துள்ளார்.
 

 

 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo