Onetamil News Logo

கருப்பர் கூட்டம் போல் செயல்படும் துரைமுருகன் மீது தூத்துக்குடி வடபாகம் காவல்நிலையத்தில் பிஜேபி ராஜேஷ்கனி புகார்

Onetamil News
 

கருப்பர் கூட்டம் போல் செயல்படும் துரைமுருகன் மீது தூத்துக்குடி வடபாகம் காவல்நிலையத்தில் பிஜேபி ராஜேஷ்கனி புகார்


தூத்துக்குடி 2020 ஆகஸ்ட் 11 ;தூத்துக்குடி கருப்பர் கூட்டம் போல் செயல்படும் துரைமுருகன் மீது தூத்துக்குடி வடபாகம் காவல்நிலையத்தில் பிஜேபி ராஜேஷ்கனி புகார். தமிழகத்தில் சமீபமாக இந்துக்களை குறி வைத்து சில அமைப்புகள் இழிவு படுத்தும் செயல்களில் ஈடுபடுகின்றனர். சில அரசியல் கட்சியினர் ஆதரவும் சில அரசியல் கட்சிகள் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். இந்து அமைப்புகள் ஓட்டுமொத்தமாக கருப்பர்கள் கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதிலும் பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்தவர்கள் தமிழகம் முழுவதும் கண்டன அறிக்கை போராட்;டம் காவல் நிலையத்தில் புகார், என பல வகையில் இந்த பிரச்சனை எடுத்து செல்லப்படுகிறது. இந்திய பிரதமராக மோடி இரண்டாவது முறையாக இந்திய மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு இந்துக்களின் பிரதிநிதியாக உலக நாடுகளுக்கு முன் உதாராணமாக வலிமையான பாரதத்தை உருவாக்க பணியாற்றி வருகிறார். அவருக்கு ஆதரவாக பல மாநில முதல்வர்களும் உலக நாடுகளும் செயல்படுகின்றன. தமிழகத்தில் இந்து முன்னனி ஆர்எஸ்எஸ் போன்ற அமைப்புகளும் மோடிக்கு ஆதரவாக இருந்து வருகின்றனர். இந்த நிலையில் தூத்துக்குடியில் பாரதீய ஜனதா கட்சியும் கிழக்கு மண்டல பொதுச்செயலாளர் ராஜேஷ்கனி வடபாகம் காவல்நிலையத்தில் அளித்துள்ள புகாரில் யூ டிபில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த துரைமுருகன் என்பவர் சாத்தை என்ற பெயரில் சேனல் நடத்தி வருவதாகவும் அவர் இந்துக்களை அவதூறாக பேசி வீடியோ பதிவிட்டதால் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும். என்று புகார் கொடுக்கப்பட்டு சப்இன்ஸ்பெக்டர் சுந்தர்சிங் மனு ரசீது வழங்கி விசாரணை மேற்கொண்டு வருகிறார். இச்சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது.  
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo