Onetamil News Logo

வாழ்விலும் சாவிலும் இணைபிரியா தம்பதிகள் !ஒரே சிதையில் தகனம் ! 

Onetamil News
 

வாழ்விலும் சாவிலும் இணைபிரியா தம்பதிகள் !ஒரே சிதையில் தகனம் ! 


தூத்துக்குடி 2019 மே 18 ; ஒருமித்த கருத்துடன் இணைபிரியாமல் வாழ்ந்து வந்த வயதான தம்பதிகள் தங்கள் சாவிலும் இணை பிரியாமல் உயிர் துறந்துள்ளனர்.  
தூத்துக்குடி மாவட்டம் ,ஸ்ரீவைகுண்டம் தாலுகாவுக்கு உட்பட்ட திம்மராஜபுரம் கிராமத்தில் வசிப்பவர்  மு .ரெங்கசாமி நாயக்கர் (95) இவர் விவசாய தொழிலாளி இவரது மனைவி ராஜம்மா வயது (84) இரண்டு பேரும் இணைபிரியா தம்பதியினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரெங்கசாமி நாயக்கர் (95)  வயது மூப்பின் காரணமாக இயற்கை எய்தினார் .
அப்போது கணவரின் உடல் அருகே உட்கார்ந்து அழுதுகொண்டிருந்த ராஜம்மா வயது (84) திடீரென மூச்சடைப்பு  ஏற்பட்டு  சரிந்து விழுந்து உயிரிழந்தார். 
இதனையடுத்து ரெங்கசாமி நாயக்கர் (95) உடல் அருகிலேயே அவரது மனைவி ராஜம்மா வயது (84) உடலும் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.இவர்களுக்குத் திருமணம் முடிந்து 50 ஆண்டுகள் ஆகிறது. இந்த தம்பதிக்கு 5 மகள்கள்  உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி விட்டது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், “ரெங்கசாமி நாயக்கர் (95) , ராஜம்மா வயது (84) தம்பதியினர் இருவருக்கும் இடையே சண்டையோ, முரண்பாடுகளோ இருந்ததில்லை. ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து வாழ்ந்தனர். எங்கு சென்றாலும் அக்கம்பக்கத்தில் உள்ளோர் அதிசயிக்கும் வகையில் சேர்ந்தே செல்வார்கள். மரணத்திலும் இத்தம்பதிகள் ஒன்றிணைந்துவிட்டனர்,” என்றனர்.
இது அந்த கிராமத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo