Onetamil News Logo

தூத்துக்குடி மாநகராட்சி உயர் தொழில் நுட்பத்துடன் உன்னத வசதிகள் ;பக்கிள் ஓடை பசுமை பூங்காவாக மாறுகிறது;மாநகராட்சி ஆணையர் டாக்டர்.ஆல்பி ஜான் வர்க்கீஸ் தகவல் 

Onetamil News
 

தூத்துக்குடி மாநகராட்சி உயர் தொழில் நுட்பத்துடன் உன்னத வசதிகள் ;பக்கிள் ஓடை பசுமை பூங்காவாக மாறுகிறது;மாநகராட்சி ஆணையர் டாக்டர்.ஆல்பி ஜான் வர்க்கீஸ் தகவல் 


தூத்துக்குடி 2018 ஜூன் 13 ;தூத்துக்குடி மாநகராட்சி உயர் தொழில் நுட்பத்துடன் உன்னத வசதிகள் ;பக்கிள் ஓடை பசுமை பூங்காவாக மாறுகிறது;மாநகராட்சி ஆணையர் டாக்டர்.ஆல்பி ஜான் வர்க்கீஸ் தெரிவித்துள்ளார்.  
 இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது...  மாநகராட்சியின் மையப்பகுதியில் அமைந்துள்ள பக்கிள் ஓடையினால்  சுகாதாரக்கேடு ஏற்படாத வண்ணம் நவீன மயமாக்க உயர் தொழில் நுட்பத்துடன்,  ஓடையின்; இருமருங்கிலும் பகுதிகளை சீரமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இப்பணியானது தூத்துக்குடி மாநகராட்சியில் செயல்படுத்தப்படும் சீர்மிகு நகரத்திட்டத்தின் கீழ்  மேற்கொள்ளபபடும்;. இதன்படி, பக்கிள் ஓடையினையொட்டிய, இருபுறமும் மின்விளக்குகள், நடைபாதை, ஓடுதளம், மரங்கள், வண்ண பூஞ்செடிகள் மற்றும் ஆங்காங்கே இருக்கை வசதிகளுடன் கூடிய பசுமை பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
பக்கிள் ஓடை வழியாக செல்லும் கழிவுநீரை சுத்தப்படுத்தி கடலில் கலக்கும் வகையில் பக்கிள் ஓடையின் கடைசி பகுதியான திரேஸ்புரம் கடற்கரை முகத்துவாரத்தில் இரண்டு நுண் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டு மேற்படி பணிகளுக்கு ரூ.33.00 கோடிக்கு திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது.
மேலும் தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் நிறைவெற்றப்படவுள்ள பாதாள சாக்கடை திட்ட பணிகளின் பிரதான பணியான 28 எம்.எல்.டி  கொள்ளளவு  கொண்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையமானது ரூ.36.89 கோடி மதிப்பீட்டில் மாநகராட்சிக்கு சொந்தமான தருவைக்குளம் உரக்கிடங்கில் அமைப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் தூத்துக்குடி மாநகராட்சியின் கழிவுநீரானது சுற்றுச்சூழல் மாசுபடா வண்ணம் நவீன தொழில் நுட்ப முறையில் சுத்திகரிப்பு செய்வதற்கு நடவடிக்கை மேற்க்கொள்ளப்பட்டுள்ளது. என மாநகராட்சி ஆணையர் டாக்டர்.ஆல்பி ஜான் வர்க்கீஸ், தெரிவித்தார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo