Onetamil News Logo

மிகவும் குறைவான கட்டணத்தில் தூத்துக்குடி அஞ்சல் அலுவலகங்களில் ஆதார் சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது 

Onetamil News
 

மிகவும் குறைவான கட்டணத்தில் தூத்துக்குடி அஞ்சல் அலுவலகங்களில் ஆதார் சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது   


      

தூத்துக்குடி 2018 மே 16 ; பொதுமக்களின் நலன் கருதி மிகவும் குறைவான கட்டணத்தில் தூத்துக்குடி அஞ்சல் அலுவலகங்களில் ஆதார் சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது                                                                                                                    
 இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது..இந்திய அஞ்சல் துறை மக்களுக்கு பல பயனுள்ள சேவைகளை வழங்குவதில் எப்பொழுதும் முன்னிலை வகித்து வருகிறது. இந்த வகையில் இந்திய அஞ்சல் துறை தற்போது  UIDAI ( Unique Identification Authority of India) யோடு இணைந்து ஆதாரில் பெயர் முகவரி மற்றும் பயோமெட்ரிக் போன்ற திருத்தங்களை தமிழகத்தில் தென்மண்டலத்தில் மட்டும் 723 அஞ்சல் அலுவலகங்களில் செய்வதற்கு ஒப்பந்தம் செய்துள்ளது.
இன்றைய காலகட்டணத்தில் ஒவ்வொரு குடிமகனும் அரசின் நலத்திட்டங்களை பெறவேண்;டும் என்றாலோ அல்லது எந்தவொரு சேவையை பயன்படுத்த வேண்டும் என்றாலோ ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனவே தான் மக்கள் தங்களுக்கு புதிய ஆதார் பெற்றிடவேண்டும் என்றாலோ அல்லது ஆதாரில் பெயர், முகவரி, புகைப்படம் மற்றும் கைப்பேசி எண் போன்றவற்றில் திருத்தங்கள் செய்திட வேண்டும் என்றாலோ அருகிலுள்ள அஞ்சல் அலுவலங்களை பயன்படுத்திக் கொண்டு சுலபமாக ஆதார் சேவைகளைப் பெற்றிட அரசு வழிவகை செய்துள்ளது.
தூத்துக்குடி அஞ்சல் கோட்டத்தில் தூத்துக்குடி, திருச்செந்தூர் மற்றும் திருவைகுண்டம் தலைமை அஞ்சலகங்கள் உள்ளிட்ட சுமார் 37 அஞ்சல் அலுவலகங்களில் ஆதார் சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது. அதற்கான கட்டண விபரங்கள் பின்வருமாறு.
 
பெயர்,முகவரி, பாலினம், பிறந்த தேதி, மின்னஞ்சல் முகவரி மற்றும் கைபேசி எண் திருத்தம் செய்தல் ரூ 30
பயோ மெட்ரிக் திருத்தம் செய்தல்ரூ 30 ;ஆதார் அட்டை கலரில் அச்சிட ரூ 24 ;ஆதார் அடடை கருப்பு வெள்ளையில் அச்சிடரூ 12 ;
 
மேலும் தபால் துறையில் பல வசதிகள் நவீனப்படுத்தப்பட்டு மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ஒருவர் தான் அனுப்பிய பதிவு தபால் / விரைவுத் தபால் போன்றவை பட்டுவாடா செய்யப்பட்ட உடன் தபால் பதிவு செய்பவரின்  கைப்பேசிக்கு தகவல் அனுப்பப்படும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விரைவுத்தபால் அனுப்பும் வசதி அனைத்துக் கிராமப்புற அஞ்சல் அலுவலங்களுக்கும் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மற்ற தனியார் கூரியர் நிறுவனங்களைவ விட மிகக் குறைந்த விலையில் வெளிநாட்டு தபால்கள் அனுப்பப்படுகின்றன. உதாரணமாக.
 
ஆஸ்திரேலியா 500 கிராம் - தனியார் கூரியர் 2490 -தபால் துறை கட்டணம் ரூ1145 ; கனடா 500 கிராம் - தனியார் கூரியர் 2010- தபால் துறை கட்டணம் ரூ1557
எனவே மக்கள் அனைவரும் தபால் துறையின் சேவைகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு தூத்துக்குடி அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளர்  செய்திக் குறிப்பில் தெரிவித்தார்கள்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo