Onetamil News Logo

உடன்குடி பகுதி குளங்களுக்கு தண்ணீர் வரும் ஷட்டர்களை வெல்டிங் வைத்து பொதுப்பணி துறை அதிகாரிகள்  அடைத்தது தொடர்பாக இன்று அவசர ஆலோசனை கூட்டம்

Onetamil News
 

உடன்குடி பகுதி குளங்களுக்கு தண்ணீர் வரும் ஷட்டர்களை வெல்டிங் வைத்து பொதுப்பணி துறை அதிகாரிகள்  அடைத்தது தொடர்பாக இன்று அவசர ஆலோசனை கூட்டம்


உடன்குடி 2018 டிசம்பர் 6 ;உடன்குடி பகுதி குளங்களுக்கு தண்ணீர் வரும் ஷட்டர்களை வெல்டிங் வைத்து பொதுப்பணி துறை அதிகாரிகள்  அடைத்தது தொடர்பாக இன்று அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது. 
                                      
உடன்குடி பகுதி குளங்களுக்கு தண்ணீர் வரும் ஷட்டர்களை வெல்டிங் வைத்து பொதுப்பணி துறை அதிகாரிகள்  அடைத்தது தொடர்பாக இன்று அவசர ஆலோசனை கூட்டம்  மாலை ( 6/12/2018) 5 மணியளவில் உடன்குடி வியாபாரிகள்  முன்னேற்ற சங்க கட்டிடத்தில் வைத்து நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அனைத்து கட்சி பிரதிநிதிகள் , விவசாயிகள் , இயக்கங்களை சேர்ந்த ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.ஆலோசனை கூட்ட முடிவில் கருமேனி ஆற்றில் வரும் தண்ணீர் ஷட்டரை அடைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 11/12/2018 செவ்வாய் அன்று உடன்குடியில் கடை அடைப்பு செய்து , சாலை மறியல் செய்வது என்றும் உடன்குடி மக்களுக்கு  பாதிப்பு ஏற்படுத்த தண்ணீர் ஷட்டரை வெல்டிங் வைத்து அடைத்து , பொது மக்கள் இடையே மோதலை உண்டாக்க வஞ்சக எண்ணத்தோடு தொடர்ந்து செயல்பட்டு வரும் பொதுப்பணித் துறை அதிகாரி வினோத் என்பவரை உடனடியாக பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்று தீர்மானங்கள் நிறைவேற்றபட்டது.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo