Onetamil News Logo

1 முதல் 19 வயது வரை உள்ள குழந்தைகள் மற்றும் நபர்களுக்கு வயிற்று புழுவை தடுக்கும் அல்பென்ட்சோல் மாத்திரை வழங்கும் பணிகளை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி, தொடங்கி வைத்தார்.

Onetamil News
 

1 முதல் 19 வயது வரை உள்ள குழந்தைகள் மற்றும் நபர்களுக்கு வயிற்று புழுவை தடுக்கும் அல்பென்ட்சோல் மாத்திரை வழங்கும் பணிகளை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி, தொடங்கி வைத்தார்.


தூத்துக்குடி 2020 செப் 14 ;தூத்துக்குடி மாவட்டத்தில் 1 முதல் 19 வயது வரை உள்ள குழந்தைகள் மற்றும் நபர்களுக்கு வயிற்று புழுவை தடுக்கும் அல்பென்ட்சோல் மாத்திரை வழங்கும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி திரேஸ்புரம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் 1 முதல் 19 வயது வரை உள்ள குழந்தைகள் மற்றும் நபர்களுக்கு வயிற்று புழுவை தடுக்கும் அல்பென்ட்சோல் மாத்திரை வழங்கும் பணிகள் தொடக்க நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, கலந்துகொண்டு, குழந்தைகளுக்கு அல்பென்ட்சோல் மாத்திரைகளை வழங்கி தூத்துக்குடி மாவட்டத்தில் இப்பணிகளை தொடங்கி வைத்தார். 
பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, பேசியதாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இரண்டாவது முறையாக 1 முதல் 19 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு சிறப்பு வயிற்று புழுவை தடுக்கும் அல்பென்ட்சோல் மாத்திரைகள் வழங்கப்படுகிறது. இந்த முகாம் வருடத்திற்கு 2 முறை நடைபெறும். பிப்ரவரி மாதத்திலும்,  செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்திலும் நடைபெறுகிறது.  இந்த முகாமின் முக்கியமான நோக்கம் 1 முதல் 19 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு வயிற்று புழுவை தடுத்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ரத்தசோகை இல்லாத ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்குவதே இதன் நோக்கம் ஆகும். 
அனைத்து குழந்தைகளும் இம்மாத்திரைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் 1,12,253 நபர்கள் உட்பட தூத்துக்குடி சுகாதார மாவட்டத்தில் ஆண் குழந்தைகள் 1,52,907, பெண் குழந்தைகள் 1,54,361 என 3,07,268 குழந்தைகளுக்கும், கோவில்பட்டி சுகாதார மாவட்டத்தில் 67,179 ஆண் குழந்தைகள், 64,208 பெண் குழந்தைகள் என மொத்தம் 1,31,387 குழந்தைகளுக்கும், மொத்தமாக தூத்துக்குடி மாவட்டத்தில் இத்திட்டத்தின்கீழ் 4,38,655 மாணவ, மாணவியர்கள் பயன்பெற உள்ளனர். 
அல்பென்ட்சோல் மாத்திரைகள் வழக்கமாக  பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள் மூலம் வழங்கப்பட்டு வந்தது. தற்போது கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் திறக்கப்படாததால் நமது மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் நகர்ப்புற சுகாதார நிலையங்கள் மூலம் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள், தாய்மார்கள் இந்த மாத்திரைகளை வாங்கிச்சென்று தங்களது குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும். அல்பென்ட்சோல் மாத்திரைகள் வழங்கும் பணிகள் 14.09.2020 முதல் 19.09.2020 வரை 3 தினங்களுக்கும், அடுத்தகட்டமாக 21.09.2020 முதல் 26.09.2020 வரை (செவ்வாய், புதன், ஞாயிற்றுக்கிழமை தவிர) நடைபெற உள்ளது. 
மேலும் விடுபட்ட குழந்தைகளுக்கு வருகிற 28ம் தேதி சுகாதார பணியாளர்கள், செவிலியர்கள் வீடு வீடாக சென்று வயிற்று புழுவை தடுக்கும் அல்பென்ட்சோல் மாத்திரைகள் வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த மாத்திரைகளை கண்டிப்பாக எல்லா குழந்தைகளும் சாப்பிட வேண்டும். இதற்கு பெற்றோர்கள் மற்றும் தாய்மார்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் ஜெயசீலன்,  மாவட்ட சமூக நல அலுவலர் தனலட்சுமி, சுகாதார பணிகள் துணை இயக்குநர் மரு.அனிதா, மாநகராட்சி சுகாதார அலுவலர் மரு.அருண்குமார், மருத்துவ அலுவலர் மரு.தேவி லாவண்யா, நகர்ப்புற சுகாதார நிலைய செவிலியர் பெர்னத் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo