Onetamil News Logo

இனி வரும் மாதங்களில் மாதந்தோறும் மின் கட்டண கணக்கெடுத்து பணம் செலுத்த  எம்பவர் இந்தியா சுற்றுச்சூழல் - நுகர்வோர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நடுவம்  செயல் இயக்குநர்  - ஆ. சங்கர்  முதலமைச்சருக்கு கடிதம் 

Onetamil News
 

இனி வரும் மாதங்களில் மாதந்தோறும் மின் கட்டண கணக்கெடுத்து பணம் செலுத்த  எம்பவர் இந்தியா சுற்றுச்சூழல் - நுகர்வோர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நடுவம்  செயல் இயக்குநர்  - ஆ. சங்கர்  முதலமைச்சருக்கு கடிதம் 


தூத்துக்குடி  2020 ஆகஸ்ட் 5 ;இனி வரும் மாதங்களில் மாதந்தோறும் மின் கட்டண கணக்கெடுத்து பணம் செலுத்த  எம்பவர் இந்தியா சுற்றுச்சூழல் - நுகர்வோர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நடுவம்  செயல் இயக்குநர்  - ஆ. சங்கர்  முதலமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். 
இதுகுறித்து எம்பவர் இந்தியா சுற்றுச்சூழல் - நுகர்வோர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நடுவம்   செயல் இயக்குநர்  - ஆ. சங்கர்  முதலமைச்சருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில்  கூறியதாவது.... கொரோனா தொற்று நோய் காரணமாக அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கினால் பிப்ரவரி முதல் மே மாதம் வரையிலான மின் கட்டணத்தை மொத்தமாக செலுத்தியதால் வழக்கமான கட்டணத்தை விட கூடுதல் தொகையை மின நுகர்வோர்கள் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் நுகர்வோரும் பொது மக்களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
 பெரும்பாலான மின் நுகர்வோர் தற்பொழுது ஆன்லைன் மூலமாக மின் கட்டணத்தை செலுத்தி விடுகின்றனர். ஸ்மார்ட் மீட்டரின் மூலமாக கணக்கெடுத்து அதன் தொகையை குறுஞ்செய்தி மூலம் மின் நுகர்வோருக்கு எளிதில் அனுப்பி விட முடியும்;. இதனால் கணக்கெடுப்பதற்கென பணியாளர்கள் வீடுகளுக்கு செல்ல வேண்டிய அவசியம் ஏற்படாது. மேலும் வணிக நிறுவனங்களும், தொழிற்சாலைகளும் தற்பொழுது மாதந்திர கணக்கின்படி மட்டுமே மின் கட்டணத்தை செலுத்துவதாக அறிகிறோம்.
ஆகவே இனி வரும் மாதங்களில் மாதந்தோறும் மின் கட்டண கணக்கெடுத்து பணம் செலுத்த ஆணையிடுமாறு இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo