Onetamil News Logo

நத்தம் அருகே மகாகாளியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா பக்தர்கள் திரண்டு தரிசனம் செய்தனர்.

Onetamil News
 

நத்தம் அருகே மகாகாளியம்மன்  கோயில் கும்பாபிஷேக விழா
பக்தர்கள் திரண்டு தரிசனம் செய்தனர்.



திண்டுக்கல் 2019 பிப்ரவரி 10 ; திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சாணார்பட்டி-மஞ்சநாயக்கன்பட்டியில் உள்ள மகாகாளியம்மன்,விநாயகர்,பாலமுருகன்,துர்கையம்மன் கோயில் மகாகும்பாபிஷேக விழா நடந்தது. இதையொட்டி கோயிலின் முன் யாகசாலை அமைக்கப்பட்டு கடந்த 8ம் தேதியன்று மாலையில்  விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமத்துடன்  பூஜை தொடங்கியது. பின்னர்  முதல் கால யாகபூஜையும் காலையில் இரண்டாம் கால யாகபூஜையும் நடந்தது. முன்னதாக இதில் காசி இராமேஸ்வரம், கங்கை, அழகர்கோவில், காவிரி போன்ற புனித ஸ்தலங்களிலிருந்து கொண்டுவரப்பட்ட தீர்த்தங்கள் நிரம்பிய குடங்கள் வைக்கப்பட்டிருந்தது. இப்புனித தீர்த்தக்குடங்கள் மேளதாளம் முழங்க கோயிலை சுற்றி வந்தது. பின்னர் இன்று கோயிலின் உச்சியில் உள்ள கலசத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு வைத்து வேத மந்திரங்கள் முழங்கிய பொழுது கருடன் வட்டமிட்டதை தொடர்ந்து பக்தர்கள் பக்தி பரவசத்துடன் குலவையிட கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டது. தொடர்ந்து தீபாராதனைகள் நடந்தது. அப்போது பக்தர்களுக்கு புனித நீர் மற்றும் பூஜை மலர்கள் பிரசாதமாக வழங்கப்பட்டது. சுற்றுவட்டாரத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo