தூத்துக்குடியில் ஃபாக்ஸர் லட்சுமண மூர்த்தி பயிற்சியில் 5 வயது சிறுவர்கள் கையை கட்டிக்கொண்டு 5 கி.மீ ஓடி நோபிள் புக் ஆப் ரெக்கார்டு புத்தகத்தில் இடம்பிடித்தார்.
தூத்துக்குடி 2021 ஜனவரி 25 ;தூத்துக்குடி ஸ்கொயர் ஸ்போட்ஸ் அகடமி சார்பில் இன்று 25. 1.2021 அதிகாலை 5 மணிக்கு தூத்துக்குடியைச் சேர்ந்த சிறுவர்கள் ஆர் ஆர் ஸ்ரிவட்சன்(5)
கிருஷ்ணா (5) ஆகிய இரண்டு சிறுவர்கள் கையை கட்டிக்கொண்டு 5 கிலோ மீட்டர் ஓடி நோபல் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளனர்.
தூத்துக்குடி 3 வது மைல் பகுதியில் இருந்து மடத்தூர் பிள்ளையார் கோவில் வரை உள்ள 5 கிலோ மீட்டர் தூரத்தை வேறும் 38 நிமிடங்களில் கடந்து சாதனை படைத்தார்கள்..
இந்த நிகழ்ச்சியில் அதிமுக அமைப்பு செயலாளர் முன்னாள் அமைச்சர் மற்றும் திருநெல்வேலி தூத்துக்குடி தென்காசி மாவட்ட வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் தலைவர் சி த செல்லப்பாண்டியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டுகளையும் பரிசுகளையும் வழங்கினார்..அந்த இரண்டு சிறுவர்களும் கடந்த 3 மாதமாக தூத்துக்குடி ஸ்கொயர் ஸ்போர்ட்ஸ் அகடமி மாவட்ட பொறுப்பாளர் ஃபாக்ஸர் லட்சுமண மூர்த்தி பயிற்சி அளித்து இருந்தார்..இந்த நிகழ்ச்சியில்..நோபிள் புக் ஆப் ரெக்கார்டு பொறுப்பாளர்கள்..சொக்கலிங்கம் பாலாஜி,பாஜக வர்த்தகர் அணி ஐயப்பன், பிஎம் அறக்கட்டளை கண்ணன்,தமிழக மாற்றுத்திறனாளிகள் சங்க தலைவர் மருத பெருமாள் ,அரசுப் போக்குவரத்துக் கழக நிர்வாகி (ஓய்வு )பேச்சியப்பன் ,மணிகண்டன் ,ஆகியோர் கலந்து கொண்டனர்..