Onetamil News Logo

தூத்துக்குடியில் அரசு போட்டித் தேர்வுகளுக்கான இலவச ஐஏஎஸ் பயிற்சி மையம் ஜின்பாக்டரி சாலையில் உள்ள மாநகராட்சி பள்ளியில் நடைபெறுகிறது. 

Onetamil News
 

தூத்துக்குடியில் அரசு போட்டித் தேர்வுகளுக்கான இலவச ஐஏஎஸ் பயிற்சி மையம் ஜின்பாக்டரி சாலையில் உள்ள மாநகராட்சி பள்ளியில் நடைபெறுகிறது.     


தூத்துக்குடி  2019 ஜூன் 13 ;டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. இதுகுறித்து மாநகராட்சி அலுவலகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது...அனைத்து போட்டி தேர்வுகளுக்கும் பயிற்சி வகுப்புகள் சிறந்த வல்லுநர்களை கொண்டு இலவசமாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த பயிற்சியின் மூலம் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பல்வேறு மனுதாரர்கள் பயனடைந்துள்ளனர். 
இதனை கருத்தில் கொண்டு தற்போது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள டிஎன்பிஎஸ்சி குரூப் 4, 2019 தேர்வுக்கு தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மனுதாரர்கள் கலந்துகொண்டு எளிதில் வெற்றி பெற ஏதுவாக போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் அரசு போட்டித் தேர்வுகளுக்கான இலவச ஐஏஎஸ் பயிற்சி மையம் ஜின்பாக்டரி சாலையில் உள்ள மாநகராட்சி பள்ளியில் செயல்பட்டுவருகிறது. அந்த மையத்தில் பயிற்சிபெற்ற மாணவர்கள் குரூப்-1 முதல் கட்டத்தேர்வில் வெற்றி பெற்று முதன்மைத்தேர்வுக்கு தயராகி வருகின்றனர். மேலும்,குரூப்-2 முதன்மைத் தேர்வில் வெற்றிபெற்றவர்கள் நேர்முகத் தேர்வுக்கு தயாராகி கொண்டிருக்கின்றனர். . இதில் கலந்துகொள்ள விருப்பம் உள்ள மனுதாரர்கள் அலுவலகத்தை திங்கள் முதல் வெள்ளி வரை அலுவலக நேரங்களில் தொடர்பு கொண்டு தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 9843335593  என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo