Onetamil News Logo

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக தேர்தலில் வாக்காளர்கள் அனைவரும் வாக்களிப்பதை வலியுறுத்திபல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரம்

Onetamil News
 

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக தேர்தலில் வாக்காளர்கள் அனைவரும் வாக்களிப்பதை வலியுறுத்திபல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரம்   


தூத்துக்குடி 2019 மார்ச் 15 ; தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக தேர்தலில் வாக்காளர்கள் அனைவரும் வாக்களிப்பதை வலியுறுத்தி இருசக்கர வாகனப்பேரணி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி,  மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா, தலைமையில் நடைபெற்றது.
    தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக வருகின்ற பாராளுமன்ற தேர்தல் மட்டுமல்லாமல் அனைத்து தேர்தல்களிலும்  வாக்காளர்கள் அனைவரும்  தவறாது வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தூத்துக்குடி மாதா கோவிலிலிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி  மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  முரளி ரம்பா, தலைமையில் அனைவரும் ஹெல்மெட் அணிந்து இரு சக்கர வாகனத்தில் பேரணி சென்றனர். வரும் வழியல் தூத்துக்குடி வ.உ.சி கல்லூரி மாணவ, மாணவிகள் வரவேற்பளித்து, அவர்களும் 100 சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் என நாடகங்கள் நிகழ்த்தி வலியுறுத்தினர்.  மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வாக்களிப்பதை வலியுறுத்தி துண்டுப்பிரசுரங்களை வாகனங்களில் ஒட்டியும், அவ்வழியாக பயணம் செய்பவர்களுக்கு வழங்கியும் வலியுறுத்தினர். இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர், சார் ஆட்சியர் சிம்ரன்ஜித் சிங், பயிற்சி சார் ஆட்சியர் அணு, தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் பிரகாஷ், வட்டார போக்குவரத்து அலுவலர் மன்னர் மன்னன், காவல் ஆய்வாளர்கள் மத்தியபாகம் ஜெயப்பிரகாஷ், தென்பாகம் ஜீன்குமார், போக்குவரத்துப்பிரிவு காவல் ஆய்வாளர் சிசல்குமார், வ.உ.சி கல்லூரி முதல்வர், மாணவ, மாணவிகள், காவல்துறை போக்குவரத்து உதவி ஆய்வாளர் வெங்கடேஷ் உட்பட  உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல்துறையினர் கலந்து கொண்டனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo