Onetamil News Logo

வல்லநாடு கிராம சபைக் கூட்டத்தில் காசநோய் விழிப்புணர்வு

Onetamil News
 

வல்லநாடு கிராம சபைக் கூட்டத்தில் காசநோய் விழிப்புணர்வு


தூத்துக்குடி 2020 ஜனவரி 28 ;தேசிய காசநோயகற்றும் திட்டம் தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு காசநோய் பிரிவு மற்றும் கருங்குளம் ஊராட்சி ஒன்றியம், வல்லநாடு ஊராட்சி இணைந்து 71 வது குடியரசு தின விழாவை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபைக் கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் சந்திரா  தலைமையில் 26.01.2020 அன்று முற்பகல் வல்லநாடு ஊராட்சி அலுவலக வளாகத்தில் வைத்து நடைபெற்றது. 
வல்லநாடு ஊராட்சி கிளார்க் சங்கர்  வரவேற்புரை ஆற்றினார்கள். ஊராட்சி துணைத்தலைவர் சுப்புலெட்சுமி  முன்னிலை வகித்தார்கள்.
வல்லநாடு காசநோய் பிரிவு முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் அ.அப்துல் ரஹீம் ஹீரா பேசுகையில், காசநோய் என்பது காற்றின் மூலம் பரவும் ஒருவகை தொற்று நோய், காசநோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் இருமும் போதோ, தும்மும் போதா, மற்றவருக்கு இந்நோய் தொற்றுகிறது.  இந்நோய்க்கு நல்லவர் - கெட்டவர், பணக்காரர் - ஏழை, படித்தவர் - படிக்காதவர் என்ற பாகுபாடு கிடையாது.  யாரையும் எளிதில் தாக்கும் இந்த நோய் 2025க்குள் முழுவதும் கட்டுப்படுத்தி காசநோயில்லா வல்லநாடு ஏற்படுத்த நாம் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொண்ட பொது மக்களுக்கு காசநோய் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை ஊராட்சி மன்ற தலைவர் சந்திரா, ஊராட்சி துணைத்தலைவர் திருமதி.சுப்புலெட்சுமி ஆகியோர்கள் வழங்கினார்கள்.இறுதியாக ஜெயசந்திரன் நன்றி கூறினார்.
இந்நிகழ்ச்சியில் யூனியன் அலுவலக பற்றாளர் திருவளர் செல்வி, வல்லநாடு மணி, கவுன்சிலர்கள், வார்டு உறுப்பினர்கள், சத்துணவு பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo