Onetamil News Logo

தனியார் பள்ளிகள் அதிக கட்டணத்துடன் கட்டாய ஆன்லைன் கிளாஸ்;ரத்து செய்யவேண்டும் ;வக்கீல் ரமேஷ் பாண்டியன் பேட்டி

Onetamil News
 

தனியார் பள்ளிகள் அதிக கட்டணத்துடன் கட்டாய ஆன்லைன் கிளாஸ்;ரத்து செய்யவேண்டும் ;வக்கீல் ரமேஷ் பாண்டியன் பேட்டி 


தூத்துக்குடி 2020 ஜூலை 10 ;இந்திய  நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால் பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் கடந்த மார்ச் மாதம் 24ம் தேதி முதல் முதல் மூடப்பட்டுள்ளன.  ஒன்றாம் வகுப்பு முதல் 7ம் வகுப்பு வரையில் பயிலும் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியில் வகுப்புகளை நடத்தக் கூடாது என்று தூத்துக்குடி வக்கீல் ரமேஷ் பாண்டியன் தெரிவித்துள்ளார். 
மேலும் அவர் கூறியதாவது..  இந்த நிலையில் மாணவர்களுக்கு தொடர்ந்து கல்வி வழங்கும் வகையில் பல பள்ளிகள்  தமிழகத்தில் குறிப்பாக தூத்துக்குடி,திருநெல்வேலி பகுதிகளில் உள்ள மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்தி வருகின்றனர். லேப்டாப்பில் குழந்தைகள் குறிப்பாக, தென் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் லேப்டாப் அல்லது செல்போன்களை பயன்படுத்தி குழந்தைகள் பாடம் கற்று வருகின்றனர். வசதியற்ற குழந்தைகள் இருப்பினும், தூத்துக்குடி,திருநெல்வேலி கிராமப்புற பகுதிகளில் படிக்கும் குழந்தைகள் இணையதளம், போன் உள்ளிட்ட வசதிகள் இன்றி எவ்வாறு ஆன்லைன் வகுப்பில் பங்கேற்பது என செய்வதறியாது உள்ளனர். மேலும், இதுபோன்று, மின்சாதன பொருட்கள் முன்பாக சிறுவர்கள் நேரத்தைக் கழிப்பதால் அவர்களுக்கு உடல் மற்றும் மன அழுத்தம் அதிகம் ஏற்படும் என்ற குற்றச்சாட்டுக்களும் எழுந்துள்ளன. 
ஆய்வறிக்கையில் அதிர்ச்சி இதனிடையே, பெங்களூரில் செயல்பட்டு வரும் மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனம் (NIMHANS) இது குறித்து ஆய்வு மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பித்துள்ளது. அதில், அவர்கள் 6 வயது வரையிலான குழந்தைகள் தொடர்ச்சியாக ஒரு மணி நேரத்துக்கு மேல் செல்போன் அல்லது மின்சாதன உபகரணங்களை முன்பாக அமர்ந்து இருப்பது உடல் நலத்தை பாதிக்கும் என குறிப்பிட்டுள்ளனர். 
ஆன்லைன் வகுப்பிற்கு எதிர்ப்பு அதனைத் தொடர்ந்து, ஐந்தாம் வகுப்பு வரையிலான சிறுவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளை ரத்து செய்ய வேண்டும் என பெற்றோர்கள் மத்தியில் கோரிக்கை எழுந்ததைத் தொடர்ந்து, எல்கேஜி, யுகேஜி மற்றும் துவக்கப்பள்ளி வரையிலான பள்ளி குழந்தைகளுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்த கூடாது. கர்நாடகத்தில் துவக்கக் கல்வி துறை அமைச்சர் சுரேஷ்குமார் அறிவித்துள்ளார். ஆனால் தமிழகத்தில் யாரும் வாய் திறக்கவில்லை.... 
 தமிழகத்தில் வலுக்கும் எதிர்ப்புகள் தமிழகத்திலும், சில தனியார் பள்ளிகள் அதிக கட்டணத்துடன் கட்டாய ஆன்லைன் கிளாஸ் எடுத்து வரும் நிலையில் தமிழகத்தில் குழந்தைகளுக்கான வகுப்புகளை ரத்து செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. திருநெல்வேலியில் உள்ள தனியார் பள்ளிகளில், தூத்துக்குடியில் உள்ள தனியார் பள்ளிகளில் மாற்றுச்சான்றிதழ் கேட்டாலும் கூட வருட கட்டணம் 1 ம் வகுப்புக்கு 50, ஆயிரம் கட்டவேண்டும் என்று மிரட்டும் பள்ளிகளுக்கு தமிழக அரசு சாட்டையடி கொடுக்கவேண்டும் என்றார் அவர்.

 

 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo